உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு உதவி செய்வதை கடவுள் விரும்புகிறார்!

உத்தரிக்கிற ஆன்மாக்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் கடவுளின் அன்புக்குரியவர்கள்.

அவர்களுக்கு உதவி செய்யவும், மோட்சத்தில் தம்மோடு அவர்கள் வந்து சேர்வதுமே கடவுளது உள்ளார்ந்த விருப்பமாக உள்ளது. கடவுளை சென்றடைவதையே இலக்காக உள்ள உத்தரிக்கிற ஆன்மாக்கள் இனி ஒருபோதும் கடவுளை வேதனைப்படுத்தப் போவதில்லை .

கடவுளின் நீதியின்படி, தாம் செய்த பாவங்களுக்கு ஆன்மா பாவப் பரிகாரம் செய்தே ஆகவேண்டியிருந்தாலும், தமது படைப்புகளின் மீது ஆண்டவர் கொண்டுள்ள அக்கறையினால், பாவப்பரிகாரங்களுக்கு உதவி செய்யும் வழிகளை நமது கரங்களின் வைத்துள்ளார்.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு நாம் உதவி செய்யும்போது கடவுள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார். தமக்கே அவ்வுதவியை செய்தது போன்ற தயை கொள்கிறார்.

தேவ அன்னை நாம் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு உதவ வேண்டுமென்கிறார்கள். 

உலகில் எந்த அன்னையும், மரணத் தருவாயில் இருக்கும் குழந்தையை இவ்வளவு உள்ளன்புடன் நேசித்திருக்கவும் முடியாது; இவ்வளவு உண்மையாக அதன் துயர் துடைக்க உழைத்திருக்கவும் முடியாது.

அந்த அளவிற்கு தேவமாதா உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் தனது குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களைத் தம்மோடு மோட்சத்தில் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள்.

நாமும் செபங்களால் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஒரு ஆன்மாவை மீட்கும் போதெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி யி னை தேவ அன்னைக்கு ஏற்படுத்துகின்றோம்.