8. நரகத்தைத் தவிர்க்கும் வழிகள்

நரகத்திலிருந்து தப்புவதற்கு ஆத்துமம் எப்போதும் தன் உயிரை இழக்காதிருப்பது, அதாவது அதை எப்போதும் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் காப்பாற்றிக் கொள்வது அத்தியா வசியமானது. சாவு கள்ளனைப் போல் வரும் என்கிறார் நமதாண்டவர்.

ஆகவே எப்போதும் விழிப்பாயிருப்பதும், ஒவ்வொரு நாளையும் தன் மரண நாளாகப் பாவித்து, சாவுக்கு ஆயத்தம் செய்வதும் இன்றியமையாத காரியங்கள்.

இந்த தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தைக் காத்துக் கொள்ள

(1)ஞான உபதேச அறிவு,
(2) தேவத்திரவிய அநுமானங்கள்,
(3) திவ்விய பலி பூசை,
(3) ஜெபம்,
(4) தியானம்
(6) ஞான வாசகம்
(7) தேவ கற்பனைகளை மனவுறுத்தலோடு அனுசரித்தல்
(8) பாவ சோதனைகளை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை வெல்லுதல்

ஆகியவை உத்தமமான வழிகளாக இருக்கின்றன.

நரகத்திற்குத் தீர்ப்பிடப்படுவதற்காகத் தம் திருமுன் நிற்கும் ஒரு தீய ஆத்துமத்துக்கு ஒரு கடைசி வரமளிக்க கடவுள் முன்வருவார் என்றால், அது கேட்பது எ தெரியுமா? "நான் மனஸ்தாபப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்ய ஒரே ஒரு மணி நேரம் தாரும்!'' என்று கேட்கும்!

இதை வாசிக்கிறவர்களே! இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதற் காக அகமகிழுங்கள்! இந்தக் கொடிய நரகத்திலிருந்து தப்புவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் குறைந்தபட்சம் அடிமை மனஸ்தாபமாவது பட்டு, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வது மட்டுமே! ஆனாலும், இன்னும் உங்களுக்கு எவ்வளவு நேரம் எஞ்சியுள்ளது என்று உங்களுக்குத் தெரியாது என்பதால், இப்போதே துரிதப்படுங்கள்.

ஏனெனில், “சாவு கள்ளனைப் போல் வரும்!''