(5) தியானம், (6) ஞான வாசகம்

(5) தியானம்

சேசுவின் மனிதாவதார நிகழ்ச்சிகளையும், விசேஷமாக அவரது பாடுகளையும், திருமரணத் தையும் தியானிக்கிற ஆத்துமம் அவரை உருகி நேசிக்கிறது. தன் பாவத்தை வெறுத்துப் பகைக் கிறது. தேவசிநேகத்திற்காகத் தன்னைப் பலியாக்கவும் முன்வருகிறது. தியானிக்காத ஆத்துமம் பாழாய்ப் போகிறது. இதைப் பற்றியே தீர்க்கதரிசியானவர், "உலகமெல்லாம் பாழாய் அழிந்து கெட்டுப்போகின்றது, ஏனெனில் மனிதருக்குள் எவனும் தன் மனதில் ஆழ்ந்து யோசித்து தியானிக் கிறதில்லை " (எரே. 12:11) என்கிறார். எனவே தேவ காரியங்களை எப்போதும் தியானியுங்கள், அப்போது தேவசிநேகத்தின் வழியாக உங்கள் பாவங்களின் மீது வெற்றி கொள்வீர்கள். இதற்காகவே நம் மகா பரிசுத்த அன்னை ஜெபமும், நமதாண்டவரின் பிறப்பு, கல்வாரித் துயரம், மகிமை ஆகியவை பற்றிய தியானமும் ஒன்று சேர்ந்த ஜெபமாலையை நமக்கு ஞான ஆயுதமாகத் தந்தார்கள்.

(6) ஞான வாசகம்

இதுவும் ஒரு வகைத் தியானமே. உண்மையில் தியானிக்க அறியாதவர்கள் நல்ல தியானப் புத்தகங்களை நிறுத்தி, நிதானித்து வாசிக்கும் போது, தியானத்தால் வருகிற நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். விசுவாசிகள் நாள் தவறாமல் தினமும் பரிசுத்த வேதாகமம், கிறீஸ்துநாதர் அநுசாரம், மன்ரேசா, தேவமாதா பற்றிய தியானப் புத்தகங்கள், மரண ஆயத்தம், அர்ச்சியசிஷ்டவர்கள்

சரித்திரம் போன்ற நூல்களில் ஒரு அத்தியாயத்தை நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு நாளும் வாசித்து, தியானிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் தங்கள் ஆத்தும் நிலையையும், தாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்றும், தேவசிநேகத்தின் மிகுதியையும் உணர்ந்து கொள்வார்கள். நரகம் அவர்கள் மட்டில் பலமிழந்து போகும்.