(2) தேவத் திரவிய அநுமானங்கள்

பாவசங்கீர்த்தனம், தேவநற்கருணை ஆகிய தேவத்திரவிய அநுமானங் களை அடிக்கடியும், அவஸ்தைப்பூசுதலை அவசர நேரத்திலும் தவறா மல் பெறுவது ஆத்துமத்தை எப்போதும் உயிரோடு வைத்திருக்கும் உபாயமாக இருக்கிறது. அர்ச்சியசிஷ்டவர்களில் சிலர் தினமும் பாவ சங்கீர்த்தனம் செய்தார்கள். சாவான பாவங்களின் மன்னிப்புக்காக அல்ல, எப்போதாவது தங்கள் ஆத்துமங்களில் அற்பப் பாவம் என்னும் தூசி படிந்தால், அதை சுத்திகரித்துக் கொள்ளும்படி அப்படிச் செய்தார்கள். பாவசங்கீர்த்தனம் அவர்களுக்கு பரிசுத்தத்னத்தின் கருவியாகவும், தேவ வரப்பிரசாதத்தின் அற்புத வாய்க்காலாகவும் இருந்தது.

ஆனால் இன்று, கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் இந்த அற்புத அனுமானத்தை, தேவ திரு இரத்தம் நிறைந்து, செந்தூரம் போன்ற பாவத்தால் சிவந் திருக்கும் ஆத்துமத்தை வெண்பனி போல சுத்தமுள்ளதாக்கும் அதிசயத் தடாகத்தை, ஒருபோதும் நினையாமல், பாவத்திலேயே நிரந்தரமாக ஜீவிக்கும் அவலநிலையே எங்கும் காணப்படுகிறது. இந்த உத்தமமான சாதனத்தை குருக்கள் முதலாய் பரிகசிக்கும் பரிதாப நிலைகூட இன்று நிலவுகிறது.

இதற்கு மாறாக, இந்தக் கொடிய நரகத்திலிருந்து மெய்யாகவே உன்னைக் காத்துக்கொள்ள விரும்புவாயென்றால், உடனே பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கு வந்து, உன் திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் உன் ஆத்துமத்தைக் கழுவும்படி அதை அவரிடம் கையளிப்பாயாக. முடிந்த வரை சாவான பாவத்தை விலக்குவதில் விழிப்பாயிருந்து போராடு. ஒருவேளை அதில் விழும் நிர்ப்பாக்கியம் நேரிடுமானால், தாமதமின்றி உத்தம மனஸ்தாபத்தோடும், இனி பாவம் செய்வ தில்லை என்ற உறுதியான பிரதிக்கினையோடும் குருவிடம் வந்து உன்னைத் தூய்மையாக்கிக் கொள். அப்போது நீ பத்திரமாயிருப்பாய். மரணம் எப்போது நேரிட்டாலும் அது உன் நித்திய பேரின்பத்தின் தொடக்கமாயிருக்கும்.

(2) தேவநற்கருணை கடும் பாவ சோதனைகள் உன்னைக் கலக்குகிறதா? நித்தியத்தைப் பற்றிய அச்சத்தால் நீ உன் ஆத்துமத்தின் சமாதானத்தை இழந்து போகிறாயா? நம் இரட்சகர் உனக் காகக் காத்திருக்கிற திருப்பந்திக்கு விரைந்து வந்து அவரைப் பெற்றுக் கொள். திவ்ய நற்கருணை உட்கொள்ளும் ஒரு வாய்ப்பைக் கூட இழக்காத படி கவனமாயிரு. அப்போது நீ அவரால் பொதியப்பட்டு பத்திரமாயிருப் பாய். அவரே உன் சத்துருவோடு உன் சார்பாகப் போராடி வெல்லுவார். இதுவே அவரது மகிழ்ச்சி! ஏனெனில் உன் ஆத்தும் மீட்பிற்காகவே அவர் மனிதனாய் அவதரித்தார். அதற்காகவே சிலுவை மரணத்திற்குத் தம்மைக் கையளித்ததோடு, அளவற்ற கொடிய வியாகுலத்திற்குத் தம் திருமாதா வையும் உட்படுத்தினார். நம் இரட்சணியமே அவரது உன்னத சந்தோஷம்.