ஆகஸ்ட் 29

ஸ்நாபக அருளப்பர் தலை வெட்டுண்ட திருநாள்.


நமது கர்த்தருடைய முன்னோடியான ஸ்நாபக அருளப்பர் யூதருக்குப் பிரசங்கம் செய்து, தப ஞானஸ்நானம் கொடுத்து பாவ வழியில் நடப்பவர்களுக்குப் புத்தி புகட்டி, சர்வேசுரனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட உலக இரட்சகருடைய வேதத்தைக் கைகொள்ளும்படி போதித்துக்கொண்டு வந்தார். 

அக்காலத்தில் கலிலேயா தேசத்து இராஜாவான ஏரோதேஸ் என்பவன் காமவெறியுள்ளவனாய் தன் சகோதரனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருந்தபடியால், அருளப்பர் அவளை நீக்கிவிடும்படி பல முறை புத்தி சொன்னார். 

இதைக் கேள்விப்பட்ட அவள் சினந்து, ஏரோதேஸுக்கு துர் ஆலோசனைக் கூறி அருளப்பரைச் சிறையிலடைத்தான். மேற்கூறப்பட்ட துஷ்ட ஸ்தீரியோவெனில் அருளப்பருடைய உயிரை எடுக்க தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள். 

அருளப்பர் பெரிய தீர்க்கதரிசியாயிருந்ததினால் அரசன் அவரைக் கொல்ல அஞ்சினான். ஏரோதேஸ் பிறந்த வருஷாந்திர நாளில் தன் தேசத்திலுள்ள பிரபுக்கள், துரைகள் முதலிய கனவான்களுக்கு விருந்து வைத்தான். 

சகலரும் விருந்தாடும்போது அந்த துஷ்ட ஸ்தீரியின் மகள் அங்கு சென்று, நேர்த்தியாய் நடித்து நடனமாடியதைக் கண்ட அரசன் மகிழ்ந்து, அச்சிறுமியைப் பார்த்து நீ என்ன கேட்ட போதிலும் கொடுப்பேன் என்று ஆணையிட்டான். 

அவள் தன் தாயின் உத்தரவுப்படி அருளப்பருடைய தலையைக் கேட்டாள்! அரசன் அதற்குச் சம்மதியாவிடினும் தானிட்ட ஆணையினிமித்தம் அருளப்பருடைய தலையை வெட்டி சிறுமிக்குக் கொடுக்கும்படி உத்தரவு கொடுத்தான். 

அருளப்பருடைய சீஷர்கள் அவருடைய சடலத்தை எடுத்து, அடக்கஞ் செய்தார்கள்.

யோசனை

நமது ஞான போதகர் யாதொரு துர்ச்செய்கையைக் குறித்து நம்மை கண்டிக்கும்போது, அவர்களைப் பழிவாங்காமல் அவர்களுக்கு பணிய வேண்டும். யாதொரு கெட்டக் காரியத்திற்காக இடும் ஆணையை நிறைவேற்ற கடமையில்லை.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். சபீனா, வே. 
அர்ச். செப்பா, அரசர் 
அர்ச். மெர்ரி, ம