பிப்ரவரி 28

அர்ச். ரோமானுஸும் லுபிலீனுஸம். மடாதிபதிகள் (கி.பி. 460) 

கூடப்பிறந்தவர்களான ரோமானுஸ், லுபிலீனுஸ் ஆகிய இருவரும் பிரான்ஸில் பக்தியுள்ள தாய் தகப்பனால் நல்லொழுக்கத்தில் வளர்க்கப் பட்டார்கள். மூத்தவருக்கு 35 வயது நடக்கையில் உலகத்தைத் துறந்து வனவாசியாய்ப் போனார்.

சில காலத்திற்குப்பின் லுபிnனுஸும் தன் தமயனைப் பின்சென்றார். இரு சகோதரர்களும் ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து கைவேலையால் தங்கள் ஆகாரத்தைப் பெற்று வந்தார்கள். துர்மன பசாசானது அவர்களை அவ்விடத்தினின்று துரத்த நினைத்து, அவர்கள்மேல் கற்களை எறிந்தமையால் அவர்கள் பயந்து காட்டைவிட்டு நாட்டுக்குத் திரும்பினார்கள்.

ஒருநாள் ஒரு ஸ்திரீ இவர்களுக்கு நடந்த சம்பவத்தைக் கேட்டு, இவர்களுக்கு அவள் சொன்ன நல்ல புத்திமதியின்படி அவர்கள் இருவரும் காட்டிற்குத் திரும்பிப் போய் சர்வேசுரனுக்கு நல் ஊழியம் புரிந்து வந்தார்கள்.

இவர்களுடைய புண்ணியத்தைப்பற்றி கேள்விப்பட்ட அநேகர் காட்டுக்குச் சென்று அவ்விரு சகோதரர்களுக்கும் சீஷர்களானதினால் அங்கே அவர்கள் அநேக மடங்களைக் கட்டி வைத்தார்கள். அந்த மடங்களிலிருந்த வனவாசிகள் நாள்தோறும் சர்வேசுரனைத் துதித்து, தபக்காரியங்களை நடத்தி, புண்ணிய வழியில் நடந்தார்கள்.

அர்ச். ரோமானுஸ் ஒரு மடத்திலிருந்த 9 குஷ்டரோகிகளை அற்புதமாய்க் குணப்படுத்தி சகல புண்ணியங்களையும் அநுசரித்துத் தளர்ந்த வயதில் மரித்து நித்திய சம்பாவனைக்குள்ளானார்.

யோசனை

யாதொருவர் தேவ ஊழித்தில் பிரவேசிக்க மனதாயிருக்கையில் பசாசால் அல்லது அதனால் ஏவப்பட்டவர்களால் உண்டாகும் தடைகளுக்குப் பயப்படாமல் தைரியமாயிருக்க வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். புரதேரியுஸ் வே.