மே 26

அர்ச். பிலிப் நெரியார். துதியர் (கி.பி. 1595) 

பிலிப் ப்ளோரென்ஸ் பட்டணத்தில் உத்தம் தாய் தந்தையிடமிருந்து பிறந்து, சிறுவயதிலேயே புண்ணிய வழியில் வாழத்தொடங்கினார். இவர் கல்வியில் தேர்ச்சியடைந்தபின் திரண்ட ஆஸ்திக்காரனான இவருடைய மாமனின் செல்வத்தை சுதந்தரித்துக்கொள்ள மனமின்றி, ஒரு பிரபுவின் பிள்ளை களுக்குக் கல்வி கற்பித்து வந்தார்.

ரொட்டியும் தண்ணீருமே இவருடைய போசனமாகும். கிடைக்கும் நேரத்தை ஜெபத் தியானத்தில் செலவழிப்பார். இரவு வேளையில் உரோமையிலுள்ள ஏழு பிரதான கோவில்களை சந்தித்து கோவில் வாசற்படியில் படுத்து இளைப்பாறுவார்.

பிறருடைய ஆத்தும் இரட்சண் யத்திற்காக உழைக்க ஆசைகொண்டு குருப்பட்டம் பெற்று கணக்கில்லாத ஆத்துமங்களை மனந்திருப்பினார்.

இவர் தேவ சிநேகத்தால் பற்றியெரிந்து சர்வேசுரனை எவ்வளவு பற்றுதலுடன் சிநேகித்தாரெனில், அவருடைய இருதயத்திற்கு அருகிலிருந்த ஒரு விலா எலும்பு உயர்ந்திருந்தது. சரீர இச்சையால் உண்டான சோதனைகளை ஜெபத்தாலும், ஒருசந்தியாலும், ஒறுத்தல் முயற்சி யாலும் ஜெயித்தார்.

மகா பக்தி உருக்கத்துடன் திவ்விய பலிபூசை நிறை வேற்றும்போது பரவசமாவார். மனிதருடைய மனதையறிந்து பின்னாளில் நிகழும் காரியங்களை அறிவிப்பார்.

அவருடைய பார்வையால் கலக்கமுற்றவர்கள் ஆறுதலடைவார்கள். அவர் வியாதியஸ்தரைத் தொட்டவுடன் சுகமடைவார்கள். எப்போதும் சந்தோஷமாய்க் காணப்படுவார்.

துன்பதுரிதத்தாலும் நிந்தை அவமானத்தாலும் கலங்கமாட்டார். இவர் தமது புண்ணியங்களாலும் பிரசங்கங் களாலும் உரோமாபுரியை முற்றிலும் மாற்றி, தமது 80-ம் வயதில் அர்ச்சிய சிஷ்டவராகக் காலஞ் சென்றார்.

யோசனை 

நாமும் தேவ கற்பனையை ஒழுங்காக அனுசரித்து சர்வேசுரனை சிநேகிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எலேயுதேரியுஸ், பா.வே.
அர்ச். குவாத்ராதுஸ், மே.
அர்ச். ஒடுவால்ட், ம.