பிப்ரவரி 21

அர்ச். தோசிதேயுஸ். துதியர் 

தோசிதேயுஸ் அழகாய் இருந்ததினால் அவருடைய தாய் தகப்பன் அவரைச் செல்லமாய் வளர்த்து வந்தார்கள். இதனால் அவரைப் பள்ளிக்கூடத் திற்கு அனுப்பாமலும் ஞானக்காரியங்களை அவருக்குப் படிப்பியாமலும், தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் தண்டிக்காமலும் வளர்த்து வந்தார்கள்.

இவருடைய பெற்றோர் இறந்தபின் இவர் படையில் சேர்ந்து தேவ பயமின்றி வாழ்ந்து வந்தார். அநேக கிறீஸ்தவர்கள் ஜெருசலேம் பட்டணத்திற்குத் திருயாத்திரையாகச் செல்கையில் இவரும் வேடிக்கையின் நிமித்தம் அவ்விடத் திற்குப் போனார்.

அங்கே கர்த்தர் பட்ட பாடுகளைப்பற்றி கேள்விப்பட்டு, நரகாக்கினை சித்தரிக்கப்பட்ட ஒரு படத்தை இவர் பார்த்துக் கொண் டிருக்கையில் ஓர் உயர்குலத்துப் பெண்மணி அங்கு தோன்றி தேவனை நம்பி விசுவாசியாதவர்களும் அவருடைய கற்பனைப்படி நடக்காதவர்களும் இறந்தபின் படும் ஆக்கினையை அவருக்கு விவரித்துக் காட்டி மறைந்தாள்.

இந்தப் பெண்மணி தேவதாயாரென்று இவர் அறிந்து சத்திய வேதப் படிப்பினையைக் கற்றறிந்து புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டவர்கள் வெகுவாய் ஆச்சரியப்பட்டார்கள்.

தோசிதேயுஸ் ஒரு சந்நியாச மடத்தில் துறவியாகச் சேர்ந்து தன் மனதை அடக்கி ஒறுத்து சிரேஷ்டருக்கு அமைந்து கீழ்ப்படிந்து, சிரேஷ்டருடைய உத்தரவுப்படி வியாதியஸ்தரை சந்தித்து சகல புண்ணியங்களையும் விசேஷமாக ஒறுத்தலையும் அனுசரித்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

யோசனை

தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளை தெய்வப் பயபக்தியில் வளர்ப்பார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். செவரியானுஸ், வே.
அர்ச். ஜெர்மனும் துணை., வே.
அர்ச். தானியேலும் துணை., வே.
முத். பெப்பின், து.