ஏப்ரல் 18

அர்ச். அப்பலோனியுஸ். வேதசாட்சி (கி.பி. 186) 

இரண்டாம் நூற்றாண்டில் உரோமைச் சக்கரவர்த்திகள் திருச்சபையை உபாதித்து வந்தார்கள்.

ஆனால் கம்மோதுஸ் இராயன் சிம்மாசனம் ஏறிய போது கிறிஸ்தவ வேதத்தின்மேல் நல்லெண்ணங்கொண்டே தன் இராணிக்கு பிரியப்படும்படி கிறீஸ்தவர்களை உபாதிக்காமலிருக்க ஒரு புதிய சட்டத்தைப் பிறப்பித்தான்.

இதனால் கிறிஸ்தவர்கள் தேசமெங்கும் அதிகரித்தார்கள்.

அப்பலோனியுஸுடைய ஊழியரில் ஒருவன் தன் எஜமான் கிறீஸ்தவனென்று அதிகாரிகளுக்கு அறிவித்தான்.

இவன் அரசாங்கத்தின் சட்டத்திற்கு விரோத மாய் கிறிஸ்தவர்களைக் காட்டி கொடுத்ததினிமித்தம் சிரச்சேதம் செய்யப் பட்டான்.

ஆயினும் அதிகாரி அப்பலோனியுஸை விசாரணை செய்து அவர் கிறீஸ்தவரென்று சேனா சங்கத்திற்கு தெரியப்படுத்தினான்.

சங்கத்தாரின் கட்டளைப்படி அப்பலோனியுஸ் அவர்களுக்குமுன் நின்று, உலக சாஸ்திரங் களிலும் வேதாகமங்களிலும் உள்ள சத்திய வேதத்தின் மகத்துவத்தையும் அதன் உத்தம் படிப்பினையையும் தெளிவாய் சங்கத்தாருக்கு விளக்கி காட்டினார்.

ஆனால் உலக அறிவால் நிறையப்பெற்ற சேனா சங்கத்தாருடைய புத்திக்கு வேதசாட்சியின் மேலான ஞானமும் சத்திய மறையின் படிப்பினையும் பிடிபடாததால் அப்பலோனியுஸை உபாதித்துக் கொள்ளும்படி அவர்கள் தீர்மானித்தார்கள்.

அவ்வாறே இந்த பெரிய சாஸ்திரி கிறீஸ்தவ வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை 

பிறர் சிநேகத்தை மறந்து மற்றவர்மேல் கோள், அவதுாறு, முதலியவை களைச் சொல்லும் வழக்கமுள்ளவர்கள் பாவத்தை சம்பாதித்துக் கொள்வர்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். கால்டின், அதிமே.
அர்ச். லாசேரியன், மே.