148ம் சங்கீதம்

பரமண்டலங்களில் வசிக்கிறவர்களே! ஆண்டவரைத் துதியுங்கள்.  உன்னத ஸ்தலங்களிலே அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.      

அவருடைய சகல சேனைகளே, அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.  

சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள். சகல நட்சத்திரங்களே, பிரகாசமே, அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.  

வானாதி வானங்களே அவரைத் துதியுங்கள்.  ஆகாய மண்டலத்தின் மேலுள்ள சகல ஜலங்கள் ஆண்டவருடைய திருநாமத்தைப் புகழ்ந்தேத்துவதாக.  

ஏனென்றால் அவர் திருவுளம்பற்றவே எல்லாஞ் சிருஷ்டிக்கப் பட்டது. அவர் கட்டளையிடவே எல்லாம் உண்டாக்கப் பட்டது. 

என்றென்றைக்கும் சதாகாலத்திற்கும் அவைகள் நிலைத்திருக்கும் படியாய்ச் செய்தருளினார். அவர் அவைகளுக்கு இட்ட கட்டளை நிறைவேறாமல் போகிறதில்லை.  

பூமியிலே வசிக்கிறவர்களே! ஆண்டவரைத் துதியுங்கள்.  மகர மீன்களே, சகல பாதாளங்களே, ஆண்டவரைத் துதியுங்கள். 

அக்கினியே, கல்மழையே, மூடுபனியே, உறைபனியே, புயல்களை எழுப்பி அவர் சொற்படி நடக்கும் காற்றுகளே, 

பர்வதங்களே, சகல கணவாய்களே, கனிதரும் விருட்சங்களே, சகல கேதுரு மரங்களே, 

காட்டு மிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, சர்ப்பங்களே, இறகுள்ள பறவைகளே, 

பூமியின் இராசாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

இளைஞர்களே, கன்னியர்களே, பிள்ளைகளே, கிழவர்களே, ஆண்டவருடைய திருநாமத்தைத் துதியுங்கள்.  ஏனென்றால் அவருடைய திருநாமம் ஒன்றே ஏத்திப் புகழத் தக்கது.  

அவருடைய மகத்துவம் வானத்தையும், பூமியையும் கடந்திருக்கிறது.  தமது ஜனத்தின் வல்லபத்தை அவர் உயர்த்தினார்.  

அவர் தம்முடைய சகல பரிசுத்தவான்களாலேயும், தம்மை அண்டியிருக்கிற சனமாகிய இஸ்ராயேலர் மக்களாலேயுந் துதிக்கப் படுவாராக. 

பிதாவுக்கும் சுதனுக்கும்....

ஆரம்ப வாக்கியம்: குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் நீர் மாசற்ற கன்னிகையாகவே விளங்குகின்றீர். சர்வேசுரனுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.