மச்சங்களுக்கு பிரசங்கம்

ரிமினி என்பது ஜெர்மானிய கடற்கரைப் பட்டணம். ஆல்பிஜீனிய பேதகம் வேரூன்றிய இடம் இதுவே. ஜெர்மானிய மன்னர்கள் பாப்பரசர் மீது வெறுப்புடையவர்கள், எனவே இத்தீய கும்பலை வளர்த்தனர். இவர்களின் தலைமை இடம் ரிமினி. அரசின் ஆதரவு இருந்ததால் கத்தோலிக்கர் துன்புறுத்தப்பட்டனர். 1220ம் ஆண்டு வேதங்கள் போதித்த மறை ஆயரை பேதகத்தினர் கொன்று விட்டனர். அந்தோனியார் ரிமினி வர இரு ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது.

பலர் அதன் மாய்கையில் மூழ்கினர். இதனைத் தகர்த்தெறிய வல்லவர் அந்தோனியார்தான் என்று மேலாளர்கள் முடிவு செய்தனர். அதற்கென அவரை அனுப்பி வைத்தனர். அவரது போதனைகளுக்குச் செவிமடுக்க மக்கள் மனம் இடம் தரவில்லை . கடல்ஓரம் சென்றார். மீன்களைப் பார்த்து மறையுரை ஆற்றினார். மீன்கள் தங்கள் தலைகளை நீரின் மேல் நீட்டி அணி அணியாய் நின்று மறையுரையைக் கேட்டன. அவர் சொன்னதாவது:

"என் அருமை மச்சங்களே! நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைபட்டுள்ளீர்கள். உங்களுக்கு நல்லதொரு இடத்தை வாழத் தந்தருளினார். நீங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லலாம். தண்ணீரையும், உப்பையும் பெற்றுள்ளீர்கள். எந்தப் புயலும், சூறாவளியும், கொந்தளிப்பும் உங்களைத் தாக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பான இடம்.

நீங்கள் பலுகிப் பெருகிட இறைவன் திருவுளமானார். நோவாவின் பேழையில் இருந்த மிருகங்களைத் தவிர எல்லா விலங்கு புள்ளினங்க ளையும் அழித்தார். ஆனால் உங்களையோ அப்படியே விட்டு வைத்தார். மக்கள் தவம் செய்யத் தூண்டுமாறு யோனாஸ் தீர்க்கதரிசியை நீங்கள் விழுங்கச் செய்து மூன்றாம் நாள் விடுவித்த பெருமை உங்களுக்கு உண்டு. உங்கள் வாயிலிருந்தே ஆண்டவர் காசு பெற்று தனக்கும் இராயப்பருக்கும் வரி செலுத்தினார்.

பரலோகஞ் செல்லுமுன் நம் மீட்பர் தாம் உயிர்த்ததை அப்போஸ்தலர்களுக்குக் காண்பிக்க உங்களையே உணவாக உண்டார். இது போன்ற பல காரணங்களால் நீங்கள் அவருக்கு ஏனைய பிராணிகளைவிட அதிகமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள்."

(இதனால் தான் மீன்கள் இல்லாத போது அதிக மீன்கள் பிடிபட கடலோரங்களில் அந்தோனியார் சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது)

இதைக்கண்ட பதிதர்கள் அதிசயப்பட்டனர். அவர் பிரசங்கத்தை கேட்டனர். பலர் மனந்திரும்பினர். அவர்களுள் 30 ஆண்டுகளாய் பதிதத்தில் இருந்த போனில்லோ என்பவன் குறிப்பிடத்தக்கவன்.

போனில்லோவின் வேலைக்காரன் தன் எஜமானின் மனந் . திரும்பலைப் பார்த்து வியந்து கானும் மனம் திரும்பினான். நல்ல கிறிஸ்தவனாக பிற்காலத்தில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தான். ஆன்ம ஆவல் மிகவுற்று, மறைத்தொண்டு செய்தான் துறவியுமானான். பின் முத்திப் பேறு பெற்ற பட்டம் பெற்றான். இவர்தான் பரோன்றி அருளப்பர்,