9. நாள் முழுவதும் கடவுளைத் துதித்துப் போற்ற உங்களுக்கு நான் ஒரு வழி சொல்கிறேன்: நீங்கள் எதைச் செய்தாலும், அதை நன்றாகச் செய்யுங்கள், அப்போது, நீங்கள் கடவுளுக்குத் துதி செலுத்துகிறீர்கள்.
10. பெரிய காரியங்களைச் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சிறிய காரியங் களைக் கொண்டு தொடங்குங்கள்.
11. உன்னையே நீ வெற்றி கொள், அப்போது, உலகம் உன் காலடியில் கிடக்கும்.
12. நம் உதடுகளைக் கொண்டு அல்ல, மாறாக, நம் வாழ்வுகளைக் கொண்டு நாம் ஒரு பாடல் பாடுவோமாக.
13. ஏனெனில் இப்போதும் கூட கிறீஸ்துவின் திருப்பெயரால், அவரது திருவருட் சாதனங்கள் வழியாகவோ, அல்லது அவருடைய புனிதர்களின் ஜெபம் அல்லது திருப்பண்டங்களின் வழியாகவோ அற்புதங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
14. அனைத்தும் கடவுளையே சார்ந்துள்ளது என்பது போல ஜெபியுங்கள், அனைத்தும் உங்களையே சார்ந்துள்ளது என்பது போல உழையுங்கள்.
15. திருச்சபை என்பது காயங்கள் ஆற்றப்படுகிற பயணிகளின் சத்திரமாகும்.
16. ஆண்டவரே, நீர் உமக்காகவே எங்களை உண்டாக்கினீர், எங்கள் இருதயம் உம்மில் இளைப்பாறும் வரை அவை அமைதியற்றவையாக இருக்கின்றன.
17. மோசமான காலங்கள், கடினமான காலங்கள், மக்கள் இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் நாம் நன்றாக வாழ்வோம், அப்போது காலங்கள் நல்லவையாகும். காலங்கள் என்பவை நாம்தான்; நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே காலங்களும் இருக்கும்.
18. ஒருவரையயாருவர் நேசிக்கும் கொடைக்காக கடவுளிடம் இரந்து மன்றாடுங்கள்.
19. என்றென்றும் வாழப் போகிறாய் என்பது போல் உன் உடலைப் பேணு; நாளையே இறக்கப் போகிறாய் என்பது போல உன் ஆத்துமத்தின் மீது அக்கறை கொள்.