புனித லிசியே தெரேசம்மாள்

20. என் மரணத்திற்குப் பிறகு, நான் ரோஜா மலர்களை மழையாகப் பொழியச் செய்வேன். பூமியின்மீது நன்மை செய்தபடி, என் மோட்சத்தைச் செலவிடுவேன்.

21. ஜெபமாலை பரலோகத்தையும் பூலோகத்தையும் இணைக்கிற ஒரு நீண்ட சங்கிலியாகும். அதன் ஒரு முனை நம் கரங்களில் இருக்கிறது, மறு முனை திவ்ய கன்னிகையின் திருக்கரங் களில் இருக்கிறது… ஜெபமாலை ஜெபம் தூபத்தைப் போல சர்வ வல்லபரின் திருப்பாதங் களை நோக்கி உயர்ந்து செல்கிறது. மாமரி நன்மை பயக்கும் பனித்துளியைப் போல உடனே பதிலளிக்கிறார்கள், அவர்கள் மனித இருதயங்களுக்குள் புதிய வாழ்வைக் கொண்டு வருகிறார்கள்.

22. இயேசுவே, நான் எப்படி இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்பதை அறிவதன் மூலமும், அப்படிப்பட்ட ஆளாக ஆவதன் மூலமும் நான் என் வாழ்வை எளிமைப்படுத்திக் கொள்ள எனக்கு உதவும்.

23. இயேசுவைப் பிரியப்படுத்துவதும், அவருடைய திரு இருதயத்தை ஆக்கிரமிப்பதும் எவ்வளவு எளிது! நாம் நம்மை மறந்து விட்டு, அவரை நேசிப்பது மட்டுமே நேசிப்பது போதுமானது!

24. ஒவ்வொரு ஆன்மாவும் ஒரே விதமாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். கடவுளின் ஒவ்வொரு தேவ இலட்சணமும் விசேஷமான முறையில் வணங்கப்படும்படியாக, ஆன்மாக்களில் பல வகைகள் இருக்க வேண்டும்.

25. அவர்கள் நம் தாயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்வது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! அவர்கள் நம்மை நேசித்து, நம் பலவீனத்தை அறிந்திருப்பதால், நாம் எதற்கு பயப்பட வேண்டும்?

26. உனக்காக, உனக்காக மட்டும் இயேசு திவ்ய நற்கருணைப் பேழையில் இருக்கிறார் என்பதை நீ உணர்கிறாயா? உன் இருதயத்திற்குள் வரும் ஆசையால் அவர் பற்றியயரிகிறார்.

27. ஆண்டவர் மாறாதவர் என்றும், அவர் மட்டுமே என்னுடைய மிகப் பெரிய ஆசைகளை நிறைவேற்ற முடியும் என்றும் நான் காண்கிறேன்.

28. மற்றவர்களுக்காக சிறிய காரியங்களைச் செய்வதில் ஒருபோதும் சோர்ந்து போகாதீர்கள், சில சமயங்களில் அந்தச் சிறு காரியங்கள் அவர்களுடைய இருதயங்களில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

29. இயேசு பெரிய காரியங்களை அல்ல, மாறாக, எளிய அர்ப்பணத்தையும், நன்றியறிதலையுமே நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

30. இயேசு உன் இருதயத்தை முழுவதும் தம் சொந்தமாகக் கொண்டிருக்க விரும்புகிறார்.

31. ஆன்மாக்களுக்கு போதிக்க இயேசுவுக்குப் புத்தகங்களோ, ஆசிரியர்களோ தேவையில்லை; அவர் சத்தமேயின்றி போதிக்கிறார்.

32. அனுதின வாழ்வின் ஒவ்வொரு சிறு பணியும் பிரபஞ்சத்தின் முழுமையான இணக்க நிலையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

33. பரிசுத்ததனம் சாதாரணமாக, கடவுளின் திருச்சித்தத்தைச் செய்வதிலும், கடவுள் எப்படி விரும்புகிறாரோ அப்படி இருப்பதிலும் அடங்கியுள்ளது.

34. நேசம் நம் சுய அர்ப்பணத்தின் அளவுக்கு ஏற்ப மட்டுமே நம்மைச் சுட்டெரிக்கிறது.