தலைவெள்ளி பக்தி


சேசுவின் திரு இருதயத்திற்கு ஆறுதலளித்து நம் மேல் இரக்கம் வைக்கும்படி மன்றாடுவோம்!

சேசு மரியாயில் அன்புச் சகோதர சகோதரிகளே கொஞ்சம் நீளமான பதிவு கண்டிப்பாக படிக்கவும் சேசுவின் திரு இருதயம் நம்மீது வைத்திருக்கும் அன்பு எவ்வளவு ஆழமானது என்பது புரியும்

தலைவெள்ளி பக்தி என்று பொதுவாக அழைக்கப்படும் சேகவின் திரு இருதய பக்தி என்பது நமதாண்டவராகிய சேசுவின் திரு இருதயத்தை நேசித்து, நம்மாலும், பிற பாவிகளாலும் அவருக்கு ஏற்படும் நிந்தை அவமானங்களுக்கு தாம் அன்போடு முன் வந்து ஆறுதல் அளிப்பதற்கான பக்தி முயற்சியே ஆகும். சேசுவின் திரு இருதய பக்தியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளும், அர்ச். மெட்டில்டாவும் பரப்பினார்கள். பதினேழாம் நூற்றாண்டில் சேசுநாதர் அர்ச். மார்கரீத் மரியம்மாளுக்குத் தம் திரு இருதயத்தை வெளிப்படுத்தி, அதன் மீதான பக்தியைப் பரப்பும்படி கேட்டுக்கொண்டார். பிரெஞ்ச் புரட்சியால் மக்களிடம் தேவ பக்தி குறைந்து பாவங்கள் பெருகின. இதனால்தான் சேசுவின் திரு இருதயம் அர்ச். மார்கரீத் மரியம்மாளிடம், “நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா?" என்று அன்போடு கேட்டார்.

திருச்சபையால் இந்த பக்தி முயற்சி அங்கீகரிக்கப்பட்டு, உலகமெங்குமுள்ள எல்லாக் கத்தோலிக்க நாடுகளிலும் பரவியது. அநேக கத்தோலிக்க இல்லங்களிலும் சேசுவின் திரு இருதய அரசாட்சி ஏற்படுத்தப்பட்டு பல வீடுகளிலும் உள்ளங்களிலும் சேசு எஜமானராகவும், அரசராகவும் ஸ்தாபிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டார்.

தற்போது நவீனப் போதனைகளால் சேசுதாதர் கடவுளாக அரசராக எஜமானராக, நல்ல நண்பராக ஏன், அன்பராகவும் கூட ஏற்க மறுக்கப்படுகிறார். அதற்கு ஏற்றாற்போல, நவீன கண்டுபிடிப்புகளாலும் அறிவியல் மற்றும் மருத்துவ சாதனங்களாலும், விஞ்ஞான வளர்ச்சியாலும் மனிதனின் தேவ விசுவாசம் குறைந்தது. இவ்வுலக மகிழ்ச்சிதான் முக்கியம் என்ற தவறான எண்ணம் ஏற்பட்டு, பாவம் பெருகி மலிந்தது சுவிசேஷத்தில் நம் ஆண்டவரிடம் ஒரு பணக்காரன், "நல்ல போதகரே, தான் நித்திய ஜீவியத்தை (மோட்சம்) அடைய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். சேசுநாதர் அவனிடம் கட்டளைகளை அனுசரித்து வா விபச்சாரம் செய்யாதிருப்பாயாக களவு செய்யாதிருப்பாயாக, உன்னைப் போலப் பிறனை தேசி" என்றார்.

 மேலும், அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் ஆண்டவர், "என்னை தேசிக்கிறவன் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பான்" என்கிறார் நாம் நல்ல கிறீஸ்தவர்களாக வாழ, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் இதில் தெளிவாக உணர்கிறோம். உதாரணமாக, ஒருவன் தன் நாட்டின் சட்டத்தை எவ்வளவு சிறப்பாக அனுசரிப்பானோ, அந்த அளவுக்கு அவன் நல்ல குடிமகனாக இருப்பான். அதுபோலவே, கிறீஸ்தவன் எந்த அளவுக்கு தேவ கட்டளைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் அன்போடு கடைப்பிடிப்பானோ, அந்த அளவுக்கு அவன் நல்ல கிறீஸ்தவனாக இருப்பான். “நானே திராட்சைச் செடி நீங்கள் அதன் கிளைகள்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளின்படி, திருச்சபை ஆண்டவரின் ஞான சரீரமாக இருக்கிறது, நாம் அதன் உறுப்பினர்களாக இருக்கிறோம். ஒருவன் சேகவை நேசிப்பான் என்றால், பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும் நேசிப்பான்

இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் நாம் பாவம் செய்ததால், சேசுவின் திரு இருதயம் புறக்கணிக்கப்பட்டது ஒவ்வொரு பாவமும் சேசுவின் திரு இருதயத்தை மிக அதிகமாக வேதனைப்படுத்துகிறது. நம்முடைய கெட்ட நினைவு ஒவ்வொன்றும் ஆண்டவரின் திருச்சிரசை ஊடுருவும் முட்களாகவும், ஒவ்வொரு சரீரப் பாவமும் அவருடைய திருச்சரீரத்தை அடித்துக் காயப்படுத்தும் கசைகளாகவும் இருக்கின்றன. நம் ஐம்புலன்களால் கட்டிக்கொள்ளப்படும் நம்முடைய ஒவ்வொரு வகையான சாவான பாவமுமே அவருடைய ஐந்து திருக்காயங்களின் காரணமாக இருக்கின்றன இதனால்தான், அவஸ்தைப்பூசுதலின்போது குருவானவர் இரு கண்களிலும், இரு காதுகளிலும், வாயிலும் கைகள், கால்களிலும், அவனுடைய ஐம்புலன்களின் சாவான பாவங்களும், அற்பப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு, அவன் இரட்சிக்கப்படும்படியாக, தைலம் பூசி ஜெபிக்கிறார்

இவ்வாறு, நாம் இரட்சணியமடைய எல்லா வகையிலும் உதவி செய்யும் சேசுவின் திரு இருதயத்தை தேசிப்பதற்குப் பதிலாக நாம் அவரைப் புறக்கணிக்கிறோம். இதற்குப் பரிகாரம் செய்யும்படியாகத்தான் சேசுவின் திரு இருதய பக்தி நமக்குத் தரப்பட்டது. ஒன்பது மாதங்களின் தலைவெள்ளிக்கிழமைகளில் சேசுவின் திரு இருதயத்திற்குப் பரிகாரம் செய்யும் கருத்தோடு பாவசங்கீர்த்தனம் செய்து, பூசை கண்டு, நன்மை வாங்கி, சேசுவின் திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் ஒன்பது தலைவெள்ளிக்கிழமைகளை அனுசரிப்பவர்களுக்கு சேசுநாதர் அர்க் மார்கரீத் மரியம்மாளின் வழியாக, நம்பிக்கை தரும் வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவையாவன

1. தங்கள் அந்தஸ்தின் சுடமைகளெல்லாம் சரியானபடி நிறைவேற்றத் தேவையான வரப்பிரசாதங்களையும் அளித்தருளுவோம்.

2.அவர்களுடைய குடும்பங்களில் சமாதானத்தை வளர்ப்போம்

3. அவர்களுடைய சகல துன்பங்களிலும் ஆறுதலாயிருப்போம்

4. அவர்கள் உயிரோடிருக்கும் போதும் விசேஷமாய் அவர்களுடைய மரண சமயத்திலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் தொடங்குகிற சகல காரியங்களும் அனுகூலமாகும்படி திரளான வரப்பிர சாதங்களைப் பொழிந்தருளுவோம்.

6. தமது இருதயமானது பாவிகளுக்குத் தயாளத்தின் ஊற்றும் கரை காணாத சமுத்திரமு மாயிருக்கும்

7. புண்ணியத்தின் வழியில் சுறுசுறுப்பற்ற ஆத்துமாக்கள் சுறுசுறுப்பை அடைவார்கள்.

& புண்ணியத்தின் வழியில் சுறுசுறுப்புள்ள ஆத்துமாக்கள் அதிசீக்கிரமாய் மேலான உத்தம தனத்தை அடைவார்கள்

9. எந்தெந்த வீடுகளில் நமது திரு இருதயப் படத்தை ஸ்தாபித்து சங்கிப்பார்களோ அந்த வீடுகளை நாம் ஆசீர்வதிப்போம்.

10.பாவத்தில் முதிர்ந்து அதில் நிலைகொண்ட ஆத்துமாக்களைத் திருப்புகிறதற்கான வரத்தை குருக்களுக்குத் தந்தருளுவோம்.

11.நமது இருதயத்தின் பேரில் பக்தி, மற்றவர்களிடத்திலும் உண்டாகப் பிரயாசைப் படுகிறவர்களின் பெயர்களை நமது இருதயத்தில் ஒருக்காலும் அழிக்கப்படாதவிதமாய் அச்சு போலப் பதிப்பிப்போம்

 12.மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஒன்பது கிழமைகள் விடாமல் நன்மை வாங்குகிறவர்கள் சாகும்போது பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டுச் சாகும் வரத்தை அளவில்லாத வல்லமையுள்ள நமது இருதயத்தின் சிதேகம் கொடுக்குமென்று அவ்விருதயத்திலுள்ள இரக்க மிகுதியால் வார்த்தைப்பாடு கொடுக்கிறோம் இப்படிச் செய்பவர்கள் நமது சத்துருக்களாயாவது தேவ திரவிய அருமானங்களின்றியாவது சாகவே மாட்டார்கள் அவர்கள் சாகும் வேளையில் தமது திரு இருதயம் அவர்களுக்கு நிச்சயமான அடைக்கலமாயிருக்கும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு ஆறுதல் அளிக்கும் பக்தி ஒன்பது தலைவெள்ளிக் கிழமைகளோடு நின்று விடாமல் நம் வாழ்தாள் முழுவதும் தொடர்வதாக இருக்க வேண்டும். இந்த பக்தி குருக்களிடம் ஆழமாக இருந்தால், விசுவாசிகளை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல அவர்களுக்கு உதவும், இதனால் ஒவ்வொரு பங்கும், மேற்றிராசனமும் சமாதானத்தைக் கண்டடையும்

இப்பக்தி முயற்சி நம் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு ஆழமாக வேரூன்றுமோ, அவ்வளவுக்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் நாம் காணும் பூசையும், உட்கொள்ளும் திவ்ய நன்மையும் சேசுவின் திரு இருதயத்தோடு நம்மை இன்னும் அதிகமாக ஐக்கியப்படுத்தும் இதன் மூலம் சேசுவின் ஆன்ம இரட்சணிய அலுவலில் குருக்களோடு இணைந்து, நாம் ஆன்மாக்களைப் பாவத்திலிருந்து மீட்க முடியும் பாவிகளுக்கு மனந்திரும்பும் வரப்பிரசாதத்தை நாம் பெற்றுக்கொடுக்க முடியும். ஒவ்வொரு கிறீஸ்தவனும் சேசுவை இன்னும் கூடுதலாக தேசிக்கும்படி, நாம் உதவி செய்ய முடியும்

சேசுவின் திரு இருதயத்தின் இரு தோற்றங்கள்: (1) அவருடைய விலாவிலிருந்து குத்திக் காயப்பட்டுத்  திறக்கப்பட்ட இருதயம்: நம்முடைய சிநேகத்திற்காகத் தன்னை முழுவதும் மரணத்திற்குக் கையளித்த இருதயம். இதைப் பார்க்கும்போது, சிலுவையில் மரண வேதனைப்பட்டுத் தொங்கும் இரட்சகருடைய இரக்கங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு அதற்காக ஆராதனையையும் புகழ்ச்சியையும் சமர்ப்பிக்கிறோம்.

 (2) தேவ நற்கருணையில் நமக்காக சிநேகத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் இருதயம்: சிநேகத்தின் பிணையாகத் தம்மையே நமது ஆன்ம உணவாக அளிக்கும் திவ்விய அன்பர்,

ஒவ்வொரு ஆத்துமத்தையும் தம்மையே பதிலுக்குப் பதில் நேசிக்க அழைப்பதை இதில் பார்க்கிறோம்.

இதை முன்னிட்டு, நமது சிநேகத்தையும், மனுமக்களின் சிநேகத்தையும் நாம் அவருக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய நேசத்தை அசடடை செய்து, பிரதி அன்பு காட்டாத பாவிகளுடைய குற்றத்திற்காகப்பரிகாரம் செய்ய வேண்டும் 

எனவே, நாம் ஒவ்வொரு நாளும், "சேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் எனக்காக உம் உயிரைக் கையளித்திருக்கிறீர் என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று அடிக்கடி சொல்வோமாக, மேலும் நம் குடும்பத்தினரிடமும், உறவினர்கள், நண்பர்களிடமும் இந்த பக்தி முயற்சியைப் பரப்ப முயற்சியெடுப்போமாக