வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது ***

வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது
தரும் பலிப்பொருளை ஏற்பீர் இறைவா

1. இதயம் ஒன்றே அதை உமக்களித்தேன்
ஏழையின் உடைமை அதுவன்றோ
இனிமேல் வாழ்வது நானல்ல - என்னில்
இயேசு நீர் வாழ்ந்திடுவீர் எந்நாளும்

2. உலகின் மாயை அனைத்தையும் துறந்தோம்
உடைமை என்றே உமைத் தெரிந்தேன்
இதயத்தின் நிறைவால் வாய் பேசும் - உந்தன்
உறவினால் நான் வாழ்வேன் எந்நாளும்