இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இனிய நாள் பிறந்தது ***

இனிய நாள் பிறந்தது
இறைபுகழ் பாடி மகிழ்ந்திடுவோம்
இறையடி தொழுதிட வாருங்கள்
வாழ்த்திசை பாடுவோம் வாருங்கள்

1. அன்பின் தேவனை கேட்டிடுங்கள்
எண்ணிய யாவுமே நிறைவுறுமே
தாயுன்னை மறப்பினும் மறவேன் என்றீர்
தேவனின் அன்பைப் புகழ்ந்திடுங்கள்
வாரீர் வாரீர் தேவனின் அன்பைப் புகழ்ந்திடுங்கள்

2. மடிந்திடும் வாழ்வையே வளமாக்க
மன்னவன் இயேசுவே அழைக்கின்றார்
பாவி நம் பாவத்தைப் போக்கிடவே
பரமனே நம்மை அழைக்கின்றார்
வாரீர் வாரீர் பரமனே நம்மை அழைக்கின்றார்