ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர் ***

ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்
அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர்
வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர்
என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர்

1. நான் நடப்பதும் படுப்பதும்
செல்லும் வழிகளும் நீர்
அறிந்திருந்தென்னை சூழ்ந்திருந்தீh
வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர்
பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும்
கடல்களின் கடையெல்லை விடியலின் அருள்வேளை

2. நான் இருளின் சிறகினில்
மறைந்திட விரும்பினும் நீர்
இருளில் ஓளியாய்த் திகழ்கின்றீர்
வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே
இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே