இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே ***

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே
என் இனிய இயேசுவே நீர் என்னில் இருப்பதனால்
நான் அஞ்சாமல் நடந்திடுவேன்
ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே
என்னைக் காக்கும் இனிய மேய்ப்பனே
உன் அன்பைப் பாடுகிறேன்
நிறைகள் நான் கண்டேன் குறைகள் இனியில்லையே
வசந்தம் நான் கண்டேன் வாழ்வில் பயமில்லையே

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தீர்
வாழ்வில் வசந்தம் மலர்ந்திடக் கண்டேன்
அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட
என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே
சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே
நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால்

2. எதிரிகள் காண விருந்தொன்றைச் செய்தீர்
வளங்கள் வாழ்வில் நிறைந்திடக் கண்டேன்
தலையில் நறுமணத் தைலம் பூசினீர்
என் பாத்திரம் நிரம்பி வழியக் கண்டேன்
உந்தன் பேரன்பிலே அருளும் நலத்தினிலே