இறைகுலமே நீர் வருவீர் ***

இறைகுலமே நீர் வருவீர்
இறை அருளை நீர் என்றும் பெறுவீர்
இறைமொழி கேட்பீர் இறைவழி நடப்பீர்
இறைவனே அருள் பொழிவார்

1. உயிருள்ள விசுவாச இதயமுடன்
உயிருள்ள இறைவனை நாடிடுவோம்
கேட்பதைக் கொடுக்கும் தெய்வமவர்
நிறை மகிழ்வைத் தரும் தெய்வமவர்
வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர்

2. தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை
கடைக்கண் நோக்கி அருள் கூர்ந்தார்
பசித்தவர் நலன்களால் நிரப்பினவர்
உன்னையும் நிரப்பிட அழைக்கின்றார்