இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என் கண்களை ஏறெடுப்பேன் ***

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன் 
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்

1.காலைத் தள்ளாட வொட்டார் உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்

2.பக்க நிழல் அவரே எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே 
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே

3.எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்