கிறிஸ்துமஸ் சிந்தனை


மனமாற்றம் இல்லாமல் வெறும் அடையாள முறையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடினால், எத்தனை கிறிஸ்துமஸ்  நம்மை கடந்து சென்றாலும்  நமக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு இருக்குது ? என்ற பாடல் வரியைப் போல நம் ஆன்மா என்னும் தோட்டத்திலே அழகு இல்லையென்றால் ஒரு பயனும் இல்லை. ஆண்டவர் படைத்த ஏதேன்ஸ் தோட்டம் போல நம் மனம் ஒரு அழகு நிறைந்த தோட்டமாக விளங்க வேண்டுமென்றால். களைகள் அகற்றப்பட்டு தோட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும். நம் உள்ளத்தில் உள்ள களைகள் என்னென்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

கோபம், ஆணவம், தான்றோன்றித்தனம், பொறாமை, வெறுப்பு, பகை, கர்வம், கற்பின்மை, கீழ்படியாமை, தாழ்ச்சியின்மை, மது என்னும் போதை, பணத்தாசை, பொருளாசை, பெண்ணாசை, இச்சை, காமம்,இன்னும் பல. இது போன்ற களைகள் மட்டுமே இருந்தால் அது தோட்டமல்ல காடு அதுவும் சாதரன காடல்ல. பேய்க்காடு..

நம் ஆன்மா ஒரு பேய்க்காடாக இருக்கிறதா ? அல்லது  களைகள் அதிகம் உள்ள பராமரிப்பில்லாத காடாக இருக்கிறதா ? அன்பான நண்பர்களே இந்தக் களைகள் நமக்கும், ஆண்டவர் இயேசுவுக்கும் மட்டுமே தெறியும். அடுத்தவர்களால் கண்டுபிடிக்க முடியாத களைகள். மற்றவர்களின் பார்வைக்கு அழகான தோட்டம் போல் காணப்படும். ஆனால் நம் பார்வைக்கும் கடவுள் பார்வைக்கும் மட்டுமே தெறியும் அது மணம் வீசும் தோட்டமா? அல்லது நாற்றமடிக்கும் களைவனமா? என்பது.

ஆகவே, இயேசுவின் உதவியோடு, களைகளை அகற்றி மண்ணை கொற்றி செப்பனிட்டு மணம் வீசும் செடிகளை நட்டுவோம்.  மணம் வீசும், இயேசு விரும்பும் அதுவும் பாலன் இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான மலர்கள் விளையும், செழித்துக்குளுங்கும் அழகிய தோட்டமாக்குவோம், அன்பு, பகிர்தல், விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் தாங்குதல், நட்பு, கற்பு, தாழ்ச்சி, கீழ்படிதல், ஏற்றுக்கொள்ளுதல் இன்னும் எத்தனையோ மணம் வீசும் மலர்களை என் இதய தோட்டத்திற்கு சொந்தமாக்குவோம். அந்த தோட்டத்தின் மத்தியில் இயேசு அதுவும் பாலன் இயேசு வாசம் செய்வார்.

மரியே வாழ்க !!!