இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

என்னுயிரே ஆண்டவரை போற்றிப் பாடிடு ***

என்னுயிரே ஆண்டவரை போற்றிப் பாடிடு
என்னுள்ளமே அவர் பெயரை ஏற்றிப் பாடிடு ஆ
என் உயிருள்ள வரையில் நான் பாடுவேன்
எந்தக் காலமும் நேரமும்
உன் புகழ் பாடியே என்றென்றும் மகிழ்வேன்

1 ஆண்டவர் நல்லவர் ஆ
சினங் கொள்ளாதிருப்பவர் ஆ
நம் பாவங்களுக்கேற்ப நடத்தமாட்டார்
நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்
தமக்கஞ்சுவோர்க்கு காட்டும் அன்பு உயர்ந்ததுவே
அது மண்ணினின்று விண்ணுலகு உயர்ந்ததுவே
அவர் தம் சொல் கேட்டு நடப்போர்
எல்லோரும் அவரைப் போற்றுங்கள்
காற்றே கடலே நதியே அலையே
இறைவன் புகழைப் பாடு
மலையே மலரே முகிலே மழையே
தேவன் புகழைப் பாடு

2. பொறுமையும் அன்பும் ஆ
கொண்டவர் ஆண்டவர் ஆ
அவர் நீதி நம் மீது இருக்கின்றதே
அவர் வாக்கு நம் வாழ்வில் நிலைக்கின்றதே
அவர் ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளிப்பார்
தம் செயல்களை அனைவரும் காண வைத்தார்
அவர் தம் சொல் கேட்டு நடப்போர்
எல்லோரும் அவரைப் போற்றுங்கள்