இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே ***

அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே

ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே


1. அன்புப் பணியாலே உலகை வெல்லுங்கள்

இன்பம் துன்பம் யாவையும் தாங்கிடுங்கள்

எளியவர் வாழ்வில் துணை நின்று

இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள்


2. மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்

மறைந்து ஒளிந்து போய்விடுமே

விண்ணில் பொருளை தினம் சேர்த்து

இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள்