நாம் அன்றாட திருப்பலியிலும், ஜெபங்களின் முடிவிலும் "ஆமென்" என்று கூறுகிறோம் ஏன்? ***

ஆமென் (ஆம் அப்படியே ஆகுக)

மனுக்குலத்தின் முதன்முதலில் ஆண்டவர் இயேசுவின் ஆமெனைச் சொன்னவர் நம் தூய அன்னை மரியா.

மீட்பின் திட்டத்திற்க்குத் துணை நிற்க வேண்டுமெனக் கேட்டபொழுது, ஆமென் என்றார் (லூக்கா 1:38).

குழந்தையின் உயிரைக் காக்க எகிப்து ஓட வேண்டும் (மத் 2:13-18), பாஸ்கா எருசலேம் செல்ல வேண்டும் (லூக் 2:29-52), திருமண விழாவிற்கு கானாவூர் செல்ல வேண்டும் (யோ 2:1-11), இவற்றிற்கெல்லாம் அன்னையின் ஒரே பதில் 'ஆமென்',

இறுதியாக மகனைக் கல்வாரி அழைத்த போது துன்பகரமானச் சூழலிலே சீடர்களோடு துணையாயிருக்க வேண்டும் என்ற நிலையிலும் அங்கேயும் அதே சொல்லை உச்சிரித்துத் தன் வாழ்வு முழுவதையும் கிறிஸ்துவின் ஆமென் மயமாக்கினார் நம் அன்னை.

அவ்வாறே இறைமகன் இயேசுவும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற ஆமென் என்று தன்னையே கையளித்தார்.

அன்னையும் ஆண்டவர் இயேசுவும் ஆமென் என்று தம் வாழ்வையே உகந்த ஏற்புடைய காணிக்கையாகக் கடவுளுக்கு செலுத்தியதே திருப்பலியில் ஆண்டவர் இயேசு நம் சார்பில் தந்தைக்குச் செலுத்தும் புகழை ஆமோதிக்கும் வண்ணம் நாம் ஆமென் என்று சொல்கிறோம். இது நாம் ஆண்டவருக்கே பணிவிடை செய்கிறோம் என்பதன் வெளிப்பாடு.

செபமாலை செபிக்கும் பொழுதும் ஆமென் கூறுகிறோம். 'ஆமென்' அன்னையின் புகழுக்கும் அவரது வேண்டுதலுக்கும் சொல்லப்படுவது மட்டுமல்ல. மாறாக அன்னை வழி கிறிஸ்துவினுடைய செபத்திற்குச் சொல்லப்படும் ஆமென் ஆகும். ஏனெனில் கிறிஸ்துவின் வழியாக ஆமென் என்று ஜெபிக்காத ஜெபம் ஏற்புடையதாக இல்லை.

அன்னை மரியாவின் வழியில் நாமும் நம்முடைய வாழ்வை இறைவன் திருவுளப்படி  ஆமென் மயமாக்குவோம். ஆமென்🙏.

இயேசுவுக்கே புகழ்!❤👑
அன்னை மரியே வாழ்க!❤👑