திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே ***

திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம்
ஆகா சந்தோஷம் பெருகிடுதே
அவர் சந்நிதி காண்கையிலே

1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம்
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம்
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்

2. இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம்
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம்
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம்
அவர் அன்பே நமை நடத்தும்