தலைவா உனை வணங்க என் தலைமேல் கரம் குவித்தேன் ***

தலைவா உனை வணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான் சிரமே தாள் பணிந்தேன்

1. அகல்போல் எரியும் அன்பு அது
பகல் போல் மணம் பெறவும்
நிலையாய் உனை நினைத்தால் நான்
மலையாய் உயர்வடைவேன்

2. நீர் போல் தூய்மையையும் என்
நினைவினில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் என்னை
சீக்கிரம் தூக்கிவிடும்

3. ஞானத்தில் சிறந்தது என்ன உயர்
தானத்தில் சிறந்தது என்ன
தாழ்மையில் மனமில்லையோ என்
ஏழ்மையை என் சொல்வேன்