இல்லம் செல்வோம் என்று கூறினர் ***

இல்லம் செல்வோம் என்று கூறினர் - இறை
துள்ளித் துள்ளிப் பாட்டுப்பாடி
செல்லும் அந்தக் கூட்டத்தோடு
உள்ளம் பொங்கச் சேர்ந்து கொண்டேன்

1. இதோ எருசேலம் வாசல் மிக எழிலாய் போகுமுன் வாசல்
இறை ஆணை தனைப் பணிந்து
இறைகுலத்தார் நன்றி சொல்கின்றனர்
தாவீதின் அரியணைகள் நீதி சொல்ல இங்குள்ளன

2. சலேம் கோட்டைகளிலே சீயோனின் மாளிகைகளிலே
நல்வாழ்வு அமைந்திடுக அமைதி ஆறாய் பாய்ந்திடுக
நல்வாழ்த்துக் கூறுகின்றேன்
அன்பு சோதரர் நண்பர் சார்பாய்