நாளாம் நாளாம் புனித நாளாம் மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்

1. அன்பான தெய்வத் தாயாரின் நாளாம்
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம்
குளோரியா இன் எக்ஸ்ச்செல்ஸிஸ் தேயோ

2. தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம்
குளோரியா இன் எக்ஸ்ச்செல்ஸிஸ் தேயோ

3. தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம்
குளோரியா இன் எக்ஸ்ச்செல்ஸிஸ் தேயோ