இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இளங்காலை இவ்வேளையிலே இறைவன் திரு இல்லத்திலே ***

இளங்காலை இவ்வேளையிலே 
இறைவன் திரு இல்லத்திலே
இணையில்லா பலி அளித்திடவே 
இறைமா குலமே வருவாய்

1. இறைவனும் மாந்தர்களும் 
ஒன்றாய் கலந்திடும் இடமிதுவே
இன்பமும் துன்பமுமே 
ஒன்றாய் கலந்திடும் இடமிதுவே

2. இறைவனே பலியாகும் 
ஈடிணையில்லாப் பலியினையே
பரம பிதாவினுக்கே 
பலி செலுத்திடும் இடமிதுவே