தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே நாம் தொழுதுனை ஏற்றி

தினமும் வாழ்த்துவோம் ஓ அன்னையே
நாம் தொழுதுனை ஏற்றி

1. தினமும் உனது பதத்தை ஏற்றி
வனமே அரும்பும் மலரை தூற்றி
மனமே உனது புகழைச் சாற்றி
தனமோர் அன்னையென் றுனையே போற்றி

2. சிறுமை நிறைந்த மனிதன் பூச்சி
வெறுமை அடர்ந்த உலகக் காட்சி
அருமை உமது தயையின் மாட்சி
பெருமை அதற்கு உலகம் சாட்சி

3. அழுது நிறை உன் தயைக்கு ஸ்துத்யம்
எமது நாவே படிக்கும் நித்யம்
உமது சலுகை எமக்கு கத்யம்
சமயம் உதவி தருவாய் சத்யம்

4. தங்கப் பிரபை பதமே சூட
அங்க முழுதும் பகலே மூட
இங்கு உமது ஸ்துதியைப் பாட
அங்கும் நான் உன் அருளைத்தேட