தேவ தாயின் மாதம் இது அல்லவோ

தேவ தாயின் மாதம் இது அல்லவோ - இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா

1. தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து
கோவிலுக்கு சாயரட்சை ஆவலுடன் போவோம் வாரீர்

2. ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தாலொரு தப்புமில்லையே
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும்
இந்த மாதம் எல்லாருக்கும் நல்லதிர்ஷ்ட முள்ளதாகும்

3. பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே
ஆவலுடன் நாம் எல்லாரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே