இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜீவனை விட உம் கிருபை மேலானது ***

ஜீவனை விட உம் கிருபை மேலானது - என்
எங்கள் உயிரான இயேசுவே
பாலைவனம் சொலையாகும்
பஞ்சமெல்லாம் நீங்கிப் போகும்
பரமன் இயேசு பார்வையினாலே
நெஞ்சமெல்லாம் இனிமையாகும்
நினைத்ததெல்லாம் நிறைவேறும்
நம் இயேசு வார்த்தையினாலே
நம் தேவன் நல்லவரே நம் தேவன் வல்லவரே

1. ஆண்டவரை மனதில் வைத்து
அனைத்தையும் நாம் செய்யும் போது
பாதைகளை அவர் செம்மையாக்குவார்
அவரை நோக்கிப் பார்த்தவர்கள்
அவமானம் அடைவதில்லை
ஆயிரமாய் ஆசீர் பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்

2. திராட்சைச் செடியின் கிளை போல
இயேசுவோடு இணைந்திருப்போம்
பலன் தருவோம் நலன்கள் பெறுவோம்
என்ன குறை இருந்தாலும் அவரோடு நாம் இருந்தால்
எல்லாமே நிறைவாகுமே நம்
வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே