வாருங்கள் அன்பு மாந்தரே ***

வாருங்கள் அன்பு மாந்தரே
பலி செலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள்

1. இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள்
ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே
அருள் வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்

2. அன்பு என்றால் என்னவென்று அவனைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவான்
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றார்
தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்