இயேசு விண்ணகத்திற்கு தாமாகச் சென்றார். மரியாள் விண்ணகத்திற்கு வரவேற்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார். புதிய நாடுகளுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, கொலம்பஸ், மெகலன் மற்றும் பல அறிஞர்கள் இவர்களைப்போல, விண்ணகத்திற்கு வழி கண்டுபிடித்தவர் அன்னை மரியாள். அவர் மட்டுமே அந்த வழியை நமக்குக் காண்பிக்க முடியும்.
இந்த விண்ணேற்பும், விண்ணேற்றமும் உடலோடும் உயிரோடும் இருந்தவர்களுக்கு நடைபெற்றது. அதாவது இயேசுவுக்கும் மரியாளுக்கும் நடைபெற்றது. விண்ணுக்கு ஏறிச்சென்றது இயேசு, அதாவது உயிர்த்தபின் 40 நாட்கள் சீடர்களோடு தங்கியிருந்து தானே விண்ணகம் சென்றது. விண்ணில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர், பழைய ஏற்பாட்டில் ஏனோக் 365 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு கடவுளோடு நடந்து கொண்டிருந்தபோது இறைவன் அவரை எடுத்துக்கொண்டார் ( தொட நூல் 5 : 23-24 ). யோர்தான் நதிக்கரையில் இறைவாக்கினர் ' எலியா ' எலிசாவோடு நடந்து கொண்டிருந்தபொழுது விண்ணிலிருந்து வந்த நெருப்புத் தேரும், நெருப்புக் குதிரைகளும் அவரை மேலே எடுத்துக்கொண்டன. அன்னை மரியாளும் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர்களெல்லாம் இறைவனால் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளபட்டவர்கள். அதாவது விண்ணில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். ஆனால் இயேசு தாமாகவே விண்ணிற்குச் சென்றவர்.
தந்தையின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றிய இயேசுவுக்கு கிடைத்த விண்ணேற்றம் என்னும் சிறப்புமிக்க மாட்சிமை. அன்னை மரியாவுக்கும் கிடைத்தது. இயேசு தானாகச் சென்றார். அன்னை மரியாள் எடுத்துக்கொள்ளப்பட்டார். திருத்தந்தை 9-ஆம் பத்தினாதர் 1854-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாள் அன்னையின் விண்ணேற்பைப் பிரகடனப்படுத்தினார். திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் 1956-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் இதை விசுவாசசத்தியமாக பிரகடனப்படுத்தினார்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠