இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஓ சர்வ தயாபரியே தீயோர் எம்மை ஆதரி

ஓ சர்வ தயாபரியே தீயோர் எம்மை ஆதரி
மாசில்லா மனோகரி தாய் மாமரி நீ வாழ்கவே
வாழ்க மரியாயே வாழ்க வாழ்க நித்திய கன்னியே
வாழ்க மோட்ச வாசலே நீ வாழ்க என்றும் வாழ்கவே

1. முட்கள் நடுவில் முளைத்த லீலி
முப்பொழுதும் கன்னியே
துன்பம் எம்மை தாக்கும் வேளை
துணையாய் நிற்கும் தாய் நீயே வாழ்க

2. ஜென்ம மாசில்லா தாயே
வாழ்த்தும் எம்மை ஆதரி
பூவோர் போற்றும் ஜோதி நீயே
அன்னையே எம் அன்னையே வாழ்க