பலியிடும் நேரம் பரிசுத்த நேரம் ***

பலியிடும் நேரம் பரிசுத்த நேரம்
பரமனே பலியாகி பணிந்திடும் நேரம்

1. உள்ளதைக் கொடுத்து நல்லதைக் கேட்கும்
நம்மவரின் நேரம்
உன்னதர் உறவில் உன்னையும் என்னையும்
இணைக்கின்ற நேரம்
இறைவனே என் தலைவனே
பலிப் பொருளாய் உன்னோடு என்னையும் ஏற்றிடு தேவா

2. கவலைகள் சொல்ல கஷ்டங்கள் நீக்கிடும்
கர்த்தரின் நேரம்
கல்லான மனிதனும் கறையுள்ள மனமும்
கசிந்துருகும் நேரம்
இறைவனே என் தலைவனே
பிறர் வாழ என்னையும்
உன் பணி இணைத்தேன் தேவா