இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நெஞ்சமே நீ ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவாய் ***

நெஞ்சமே நீ ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவாய்
தேவனவர் திருப்புகழை அவனியில் சாற்றிடுவாய்
தாயும் அவரே தந்தையும் அவரே
அவர் திருப்பெயரை புகழ்ந்து பாடுவாய்

1. மாண்பும் மகத்துவமும் அவரது உடைமை
ஒளியில் உறைபவை இறைவனின் ஆடை
கடலே பாடுவாய் கானங்கள் எழுப்பி
எந்நாளும் அன்பு செய்யும் தேவனைப் புகழ்வாய்

2. நதிகளும் ஆறுகளும் அவர் மனம் கூறாதோ
பனிமூடும் மலைகளும் அவர் புகழ் பாடாதோ
வானத்துப் பறவைகள் கானங்கள் இசைத்து
எந்நாளும் அன்பு செய்யும் தேவனைப் புகழ்வாய்