ஆரோக்கிய மாதா ஆலயம்.
இடம் : கயத்தாறு.
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித லூர்து அன்னை ஆலயம்
குடும்பங்கள் : சுமார் 200
அன்பியங்கள் : 10
ஞாயிறு திருப்பலி : மாலை 06.00 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி அலோசிஸ் துரைராஜ்.
திருவிழா :செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.
வரலாறு :
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.1898 ம் ஆண்டு நிறுவபட்டு உள்ளது. ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதய பங்குதந்தை ம.சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2001 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் எழுப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டபட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்டு 30 ஆம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார்,புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 48 அடி உயரமுள்ள வெள்ளிதேரின் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள். தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது. சாதி,மதம் இனம் வேறுபாடு இன்றி மக்கள் மாதாவை வழிபட்டு வருகிறார்கள்.