கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 22 /25 ***


“ நீர் கடவுளின் அருளை அடைந்துள்ளீர் “ லூக்காஸ் 1: 30

அன்னைக்கு புகழ்பாடலோடு இன்றைய சிந்தனையை ஆரம்பிப்போம்.

“ மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் நேசம் இல்லாதாவர் நீசரே ஆவார். வாழ்க ! வாழ்க ! வாழ்க மரியே ! வாழ்க ! வாழ்க ! வாழ்க மரியே !

“ மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ  பெற்றாய் “

“ தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே “

அன்னையை போற்றுவதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.

எத்தனை சிறப்பிற்குறியவள் நம் தாய்.. இதுமட்டுமல்ல மேலும் சிறப்புகள் உண்டு.. இந்த உலகத்திலேயே முதல் கிறிஸ்தள் அன்னைதான். என்று கபரியேல் தூதர் அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்னாரோ அன்றே அன்னை கிறிஸ்தவளாகிவிட்டாள்.

அதே போல் கடவுளின் வார்த்தை அறிவிக்கப்பட்ட கடைசி ஆளும் அன்னைதான். அதன் பின்பு இயேசுவின் மூலமாகத்தான் பேசுகிறார். அன்னை அன்று “ இதோ ஆண்டவருடைய அடிமை உம் வார்த்தையின்படியே ஆகட்டும் “ என்று சொன்னார். தன்னை கடவுள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று தன்னையே கடவுளுக்காக கையளித்தாள் நம் தாய்.

கடவுள் நிம்மதி அடைந்தார். “ அப்பாடா ! என் திருவுளம் நிறைவேறப்போகிறது. இனி என் மகன் பார்த்துக்கொள்வான் “ என்று கடவுள் ரிலாக்சாகிவிட்டார். கடவுளுக்கே நிம்மதி கொடுத்தவள் நம் தாய். கடவுள் மகனுக்காக தன் சதை, ரத்தம் கொடுத்தவள் நம் தாய். அன்று அன்னை கடவுளுக்காக, கடவுளுக்கே தாயான வரலாறு இருக்கிறதே அது பழைய ஏற்பாட்டு காலமல்ல இனி எந்த காலத்திலும் நிகழமுடியாத மாபெரும் வரலாற்று அற்புதம். ஆண்டவராகிய கடவுளுக்கும் மகிழ்ச்சி கொடுத்தவள் அன்னை.

ஆக கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள உறவுக்கு ஒரே சாட்சி அன்னை மரியாள்தான். கடவுளை மனிதனிடம் கொண்டுவர ஒரு ஊடகமாக செயல்பட்டாள் அன்னை மரியாள். அதோடு நின்றுவிடவில்லை.தனக்கு பிள்ளையாக பிறந்த கடவுளின் மகனை பாலூட்டி, சீராட்டி முப்பது மூன்று ஆண்டுகாலம் வளர்த்தவள். இயேசு அன்னையின் வயிற்றில் இருந்த பத்து மாதங்களையும் சேர்த்தால் 33 ஆண்டுகள், 10 மாதங்கள் இயேசுவோடு வாழ்ந்தவள். அதாவது கடவுளோடு வாழ்ந்தவள். 

மகா போற்றுதலுக்கும் வணக்கத்திற்க்கும் உரியவள் அன்னை மரியாள். இவரே ஆண்டவரின் தாய்.. இவரே நம் தாய்..அன்னையை போற்றுவோம் அவரை வாழ்த்துவோம் இந்த நன்னாளில் அன்னையின் தியாகத்தை, மன உறுதியை, அவளின் தூய்மை, அவளின் மேன்மையை சிந்திப்போம்.

கழமுடியாத மாபெரும் வரலாற்று அற்புதம். கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள ஒரே சாட்சி அன்னை மரியாள்தான். கடவுளை மனிதனிடம் கொண்டுவந்த ஊடகம் அன்னை மரியாள். ஆண்டவரின் வல்லமையை தன்னில் நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தவள் அன்னை மரியாள். கடவுளின் வேண்டுகோளுக்கு சம்மதம் தெறிவித்தவள். ஆண்டவர் இயேசுவை தன் உதிரம், சதையை கொடுத்து ஈன்றவள்.

மகா போற்றுதலுக்கும் வணக்கத்திற்க்கும் உரியவள் அன்னை மரியாள். இவரே ஆண்டவரின் தாய்.. இவரே நம் தாய்..அன்னையை போற்றுவோம் அவரை வாழ்த்துவோம் இந்த நன்னாளில்..

ஜெபம்: “ தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே “. எங்கள் மீது நேசமும் பாசமும் வைப்பது உன் கடமை.எங்களை பார்த்துக்கொள்வதும், ஆறுதல் அளிப்பதும் உன் கடமை அம்மா. பிள்ளைகளை தாய் பார்க்காமல் வேறு யாரம்மா பார்ப்பார்கள் ?. பிள்ளைகளாகிய நாங்கள் தவறு செய்தாலும் எங்களை வெறுக்காமல் உன் புதல்வனிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள். உம் புதல்வனின் பிறப்பு விழாவைவுக்கான தயாரிப்பு பணியில் உள்ள நாங்கள் உம்மிடம் எங்களை ஒப்படைக்கிறோம். எங்கள் மீது மனமிரங்கும் தாயே. இந்த உலகுக்கு கடவுளை குழந்தயாக பரிசளித்த உன்னிடம், எங்கள் ஆன்மாக்ளை இறைவனுக்கு பரிசாக நாங்கள் அளிக்க அன்னையே உன்னிடம் கெஞ்சி மன்றாடுகிறோம் -ஆமென்