கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 21 /25 ***


“  பாவ மன்னிப்பில் உளதாகிய மீட்பை அவர் தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருடைய வழிகளை அமைக்க அவர் முன்னே செல்வாய் ”

                                              லூக்காஸ் 1 : 77-78

இயேசுவின் பிறப்பும் அறிவிக்கப்பட்டாயிற்று, ஸ்ஞாபக அருளப்பரின் பிறப்பும் அறிவித்தாயிற்று..இயேசு பிறக்கப்போகும் நாட்களும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது பாலன் இயேசு பிறக்கப்போகும் இடம் என்பதை நாம் தீர்மானிக்கவேண்டும். ஆலய குடிலிலா ? அல்லது நம் வீட்டில் வைத்திருக்கும் குடிலிலா ? அல்லது நம் உள்ளக்குடிலிலா? என்பதை நாம் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது.

மேலே உள்ள “ பாவ மன்னிப்பில் உள்ளதாகிய மீட்பை “ என்ற வரியை சிந்தித்து பார்ப்போம்...நமக்கு பாவ மன்னிப்பு இறைவனிடம் தேவைப்படுகிறது. நமக்கு மன்னிப்பு பிறரிடம் அல்லது பிறரை மன்னிக்கும் மன்னிப்பு நமக்கு தேவைப்படுகிறது. “ நான் உனக்கு ஆயிரம் திணாரை மன்னிக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன். நீ ஒரு நூறு திணாரை மன்னிக்க மாட்டாயா ? “ என்று நம் ஆண்டவர் நம்மைப் பார்த்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்..

நாம் செய்யும் சிறு சிறு பாவங்களுக்காக உடனே வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு மீண்டும் அந்த சிறு சிறு பாவங்கள் செய்யாமல் இருக்காவிட்டால் என்ன ஆகும்?. சிறு சிறு பாவங்கள் பெரிய பெரிய பாவங்களை செய்ய துணிச்சல் கொடுக்கும். மனதில் பாவம் செய்கிறோம் என்ற உறுத்தல் இல்லாமல் போய்விடும். பின் பாவமே நம் வழக்கமாகிவிடும். பின் சாவான பாவங்கள் செய்ய ஆரம்பிக்கும். அப்போது நம்மிடம் உள்ளம் இருக்காது. ஆன்மா இருக்காது. யாராவது அறிவுறை சொன்னால் அறவே பிடிக்காது. அப்போது மனம் செத்து பிணம்தான் இருக்கும். அதுவும் சாத்தானுக்கு சொத்தாகிவிடும்.

அதன் பின்புதான் அடிகள் விழ ஆரம்பிக்கும்.. அது தொடர்ந்து நீடிக்கும்..விழுந்து எழும் முன் மீண்டும் அடிகள்.. நாம் எங்கே இருக்கிறோம் என்று திரும்பும் முன் பாவ்விணைகள் நம்மை பின்னிக்கொண்டிருக்கும்.அப்போது சாத்தான் உன்னைவிட்டு வேறொருவனை கெடுக்க சென்றிருக்கும்..அப்போது நிகழும் அடிகளும், துன்பங்களும், வேதனைகளும் சாகும்வரை தொடரும்..ஏன் செத்தபின்பும் தொடரும்... இது பொதுவாக பாவத்தில் விழுந்து மூழ்கும் எல்லாருக்குமே இதுதான் விதி..

சரி தெறியாமல் பாவம் செய்து விட்டோம்.. 

பெரிய பாவமே செய்து விட்டோம் உடனே எழ வேண்டும்..இதற்கு முன் எழ கூட நினைத்த்தில்லை..ஆனால் இப்போது நினைக்கிறேன். உடனே எழ வேண்டும். நான் செய்த்து பாவம். என் இயேசுவை துன்ப்ப படுத்திவிட்டேன்.. என் பாவங்களால் அவருக்கு துரோகம் செய்து அவரை அவமானப்படுத்தி விட்டேன். 

இனி கூடவே  கூடாது எழுவேன். “ எழுந்து என் தந்தையிடம் செல்வேன். என் கதை முழுதும் எடுத்துச்சொல்வேன் “ என்று ஊதாரியின் மைந்தன் போல சுமைதாங்கியவர் இன்றும் நமக்காக சுமைதாங்கியாய் இருக்கும் இயேசுவிடம் சென்றால் உடனே நமக்கு விடுதலை. நாட்டில் உள்ள கோர்ட் போல் வழக்கு இழுத்தடிக்கப்படாது. உடனே தீர்ப்பு கிடைக்கும். வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.. ஒரே ஒரு நிபந்தனையோடு “ மீண்டும் பாவம் செய்யாதே சமாதானமாய்ப் போ “

ஜெபம் : இரு கரம் விரித்தவராய், இதயத்தை திறந்தவராய் இறைவனாகிய நீ இருக்க இனியும் நாங்கள் தாமதம் செய்வது கொஞ்சம் கூட சரியிலை. இப்போதே எழுகிறோம். தந்தையாகிய உம்மை நோக்கி நடக்கிறோம்.  இந்த முறையாவது நீர் எங்கள் உள்ள்த்தில் பிறக்காமல் உம்மை விடப்போவதில்லை. அதற்காக உம்மை மன்றாடுகிறோம்- ஆமென்