கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 1/25 ***


“ உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவோம். உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள் “

                     ஆதியாகமம் 3 : 15 ( பழைய பதிப்பு )

நமக்கெல்லம் அன்னை மரியாளை 2014 ஆண்டுகளாகத்தான் தெறியும். ஆனால் கடவுளுக்கு உலகம் தோன்றியது முதலே தெறியும். என்று ஏவாள் தவறு செய்தாளோ, என்று சாத்தான் தன் ஆட்சியை துவக்கினானோ அன்றே சாத்தானின் கதையை முடிக்க புதிய ஏவாளாக அன்னை மரியாள் தேர்ந்து கொள்ளப்பட்டாள். இவைகள் யாருக்கும் தெறியாத மறைபொருளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏன் மாதாவின் பெற்றோர்களான புனித சுவக்கின், அண்ணம்மாளுக்கு கூட தெறியாது. ஏன் மாதாவுகே தெறியாது கபரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லும் வரை. அன்னையும் மற்றவர்கள் போல மீட்புக்காக, மீட்பருக்காக காத்துக்கொண்டிருந்தாள். எப்போதும் ஜெபித்துக்கொண்டும் வேதாகமத்தை(பழைய ஏற்பாடு) வாசித்துக்கொண்டும் ஜெபத்திலும் தவத்திலும் வாழ்ந்து வந்தார்..

கடவுளை பொறுத்தவரை தன் மகளான மரியாளை தனக்கு அன்னையாக தேர்ந்து கொண்டு “ நாளாம் நாளாம் புனித நாளாம் மாதாம் மேரியின் பிறந்த” நாளுக்காக காத்திருந்தார். 

அன்னை மரியா : இவர் ஒரு தூய்மை பெட்டகம். எளிதில் இரங்கி விடுவாள், இளகியும் விடுவாள். அன்னை ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து அவர்களுக்கே உரிய பரந்த மனப்பான்மை கொண்டவள். பாவம் அறியாதவள்..தூயவள், தூயவள், தூய்மை மட்டுமே உடையவள்...

மோயிசனுக்கு கடவுள் முள் செடியின் மீது காட்சி “ மோயிசனின் காலணிகளை கழற்றவும், சற்று அப்பால் நிற்கவும்  நிபந்தனை விதித்த கடவுள், அன்னையின் கருவறையில் பத்துமாதமிருக்க நம் அன்னைக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை..

ஜெபம் : மூவோரு கடவுளான தந்தையே ! எங்கள் அன்னையின் தூய்மையை நினைத்து பார்த்துவிட்டு எங்கள் அகத்தை திரும்பி பார்த்தால் அது வானுக்கும் மண்ணுக்கும் உண்டான இடைவெளியை விட அதிகமாக இருக்கிறது. உம் திருக்குமாரனின் பிறந்த தினத்தை எதிர் நோக்கி இருக்கிற நாங்கள். கிறிஸ்துமஸ் விழாவை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்பதற்கு பதிலாக எந்த மனதோடு கொண்டாடலாம் என்பதை சிந்திக்க கடமை பட்டுள்ளோம். இயேசு வரப்போகிறார், இப்போதே வருவார், நாளை வருவார் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறோமே.. தவிர ஏற்கனவே இயேசு நம்மிடம்  நற்கருணையின் மூலம் வந்து கொண்டிருப்பதை மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டுகளும் உம்முடைய பிறப்பை கொண்டாடுகிறோம் ஆன்மாவில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல்..ஓ திவ்ய இயேசுவே இந்த முறை உம்மை நாங்கள் விடுவதாக இல்லை. நீர் எம் உள்ள குடிலில் பிறந்தே ஆகவேண்டும். அதற்காக எங்கள் உள்ளத்தை ஒரு ஆலயமாக மாற்றுவோம். உமக்காக எதையும் நாங்கள் இழப்போம்.. எம்மையே உமக்காக தயாரிக்க வரம் தாரும்..