“ மரியாளின் வாழ்த்தை எலிசபெத் கேட்டவுடனே, அவள் வயிற்றினுள்ளே குழந்தை துள்ளியது “
லூக்காஸ் 1 : 41
புனித ஸ்நாபக அருளப்பர் தன் தாய் எலிசபெத் வயிற்றினுள் இருக்கும் போதே ஆண்டர் இயேசுவையும், ஆண்டவரின் தாயையும் அறிந்து கொண்டவர். அதனால்தான் மாதா தன் தாயை வாழ்த்தியதும் துள்ளிக்குதிக்கிறார். அவரும் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார். இதோ ஆண்டவர் இயேசுவின் சர்ட்டிபிகேட்,
“ பெண்களிடம் பிறந்தவர்களில் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை “
லூக்காஸ் 7 : 28
இப்படி ஆண்டவர் இயேசுவால் பாரட்டப்பட்டவர், இயேசுவுக்கு முன்பாக கடவுளால் அனுப்ப பட்டவர். இவர்தான் கடைசி இறைவாக்கினர் என்றும் சொல்லலாம்.
“ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர்தன் வழியை செம்மைபடுத்துங்கள்”
லூக்காஸ் 3 :4
என்று அறிவித்தவர். ரொம்ப சிம்பிளாக வாழ்ந்தவர். இறைவன் இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் பேறு பெற்றவர். உண்மையை பயமின்றி கூறியவர். அரசன் எரோதையையே எதிர்த்தவர். அவன் தன் சகோதரனின் மனைவியை வைத்திருக்கலாகாது என்று சொன்ன காரணத்திற்காகவே சிறைப்பட்டவர். உண்மைக்காக தன் தலையை கொடுத்தவர். இயேசு வாழ்ந்த காலத்திலே எராதாளின் சூழ்ச்சியாள் எரோதால் கொல்லப்பட்டவர்.
இப்படிப்பட்ட மாபெரும் நீதிமான், புனிதர் எலிசபெத்தின் வயிற்றில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதுதான் அன்னை மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு, மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்டது.
இந்த புனித ஸ்நாபக அருளப்பர் வயிற்றில் ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்டார்..
ஆனால் நாம் எத்தனை வயதானலும், ஞானஸ்தானம் பெற்றிருந்தாலும், உறுதி பூசுதல் பெற்றிருந்தாலும், வாரம் தவறாமல் நற்கருணை வாங்கினாலும் ஆண்டவர் இயேசுவை முழுமையாக அறிந்து கொள்வதுமில்லை அட்லீஸ்ட் அதற்கான முயற்சிகள் கூட செய்வது இல்லை. ஏன் ? எனென்றால் நம் சிந்தனையும், முக்கியத்துவமும் வேறு எங்கோ அல்லது யாரிடமோ இருக்கிறது. அதனால்தான் நம்மால் அவரில் முழுமையாக மூழ்க முடியவில்லை.
ஜெபம் : அன்பான இயேசுவே உம்மையும், உம் தாயையையும் தன் வயிற்றில் இருக்கும்போதே கண்டுகொண்ட புனித ஸ்நாபக அருளப்பரை நினைக்கும்போது பேருவுககை அடைகிறோம். அதே வேளையில் எங்களால் ஏன் முடியவில்லை என்று உணரும்போது வெட்கப்படுகிறோம். எங்களுக்கு எத்தனையோ உலக ரீதியான தடைகள் உள்ளன. தடைகளை தகர்தெறிவதில் வல்லவரான நீர், எங்களுக்குள்ளே இருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து உம் உம் தெய்வீக ஆற்றலால் எம்மை நிரப்பி உம்மை முழுமையாக புரிந்து உம் பிறப்பு விழாவுக்கும் எங்களை தயாரிக்க வரம் தாரும் - ஆமென்