இயேசுவின் விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் வழிந்ததன் பொருள் என்ன?

ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
யோவான் நற்செய்தி 19:34

இங்கு இயேசுவின் விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் வழிந்ததன் பொருள் என்ன??

எதற்காக இங்கு நற்செய்தியாளர் வேறு எங்குமில்லாதவாறு இதில் குறுக்கறுத்து, நிறுத்தி இது உண்மை.. இதைக் கண்டவரே சாட்சி என வலியுறுத்தி கூறுகிறார்..

இந்த பகுதிக்கு முதலாவது நூற்றாண்டை, மற்றும் ஆதி தந்தையர்களின் விளக்கம் அல்லது புரிதல் என்ன என்று இங்கு பார்ப்போம்??

யோவான் நற்செய்தி எப்போதுமே எழுதப்பட்டதற்கு பல படிகளாக அள்ளது பல அடுக்கு விளக்கமுண்டு..

இப் பகுதியும் விதிவிலக்கல்ல.. உண்மையில் பல படி (multiple layers) விளக்கமுண்டு..

அதில் குறிப்பிட்ட மூன்று விடயத்தை உங்களுக்கு இங்கு பகிர்கிறேன்...

01. மறைநூல் வாக்கு நிறைவேறியது.. "தீர்க்கதரிசனங்கள் கூறியபடி இயேசுவே விலாவில் குத்தப்பட்ட மெசியா என்பதே அது"

02. இயேசுவே புதிய ஆதாம்.

03. இயேசுவே புதிய ஆலயம் (temple)

ஒவ்வொன்றாக பார்ப்போம்..

01 இரத்தமும் தண்ணீரும் வெளியேறியதற்கான முதலாவதும் அடிப்படையானதுமான அர்த்தம் யோவான் நற்செய்தியாளரே குறிப்பிடுகிறார்..

"எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.

மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது.
(யோவான் நற்செய்தி 19:36-37)

இங்கு யோவான் நற்செய்தியாளர் கூறும் மறைநூல் வாக்கு வேறு எதுவுமல்ல பழைய ஏற்பாட்டில் செக்கரியா நூலில் வரும் பன்னிரெண்டாவது மற்றும் பதின்மூன்றாவது அதிகாரமே..

(காண்க)
நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் #தாங்கள் #ஊடுருவக் #குத்தியவனையே #உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.
செக்கரியா 12:10

"அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் #நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும்; தோன்றும்.
செக்கரியா 13:1

இங்கு யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடும் முதன்மை காரணம், செக்கரியா மறைநூலில் குறிப்பிடும், விலாவில் குத்தப்படும் மெசியா இயேசுவே என்பதாகும்..

அந்த மெசியாவான இயேசுவையே குத்தி அவர்கள் உற்றுநோக்க போகிற அதேவேளை அதே நாளில் அவரினின்று வெளிப்படும் தண்ணீரான ஊற்றே( நீரூற்று) எருசலேமில் குடியிருப்போரையும், முழு யூதேயாவையும் அவர்களின் பாவத்தையும், தீட்டையும் கழுவி போக்கபோகிறது என்பதே ஆகும்..

சுருக்கமாக சொன்னால்... யோவானின் நற்செய்தியாளர் பார்வையில் குறிப்பிடுவது, தண்ணரீரும், இரத்தமும் ஒரு ஊற்றைப்போல ஒடிவந்து பாவத்தை கழுவிக்கொண்டு செல்கிறதாக உள்ளது...

இரண்டாவது விளக்கம்.

02..இயேசுவே புதிய ஆதாம்

யோவான் நற்செய்தியை அதிகம் ஆராய்ந்தால் புரியும் அவர் இயேசுவை ஒரு மணவாளனாக, அத்தோடு புதிய படைப்பாக வருபவராக ஆதாவது ஆதாமைப்போல (முதல் மனித படைப்பு) காட்டுவார்...

இதை மனதில் வைத்து பார்த்தோமானால் இரண்டாவது காரணமான இயேசுவே புதிய ஆதாம் என்பது புலப்படும்..

இங்கு யோவான் வர்ணிக்கிறார் இறந்த இயேசுவின் விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் வெளியறியதாக..
முதலாவது நூற்றாண்டில் இதை பார்த்த அல்லது தெரிந்த எந்த ஒரு யூதர்களுக்கும் மனதில் வருவது செக்கரியாவின் மறைநூல் மட்டுமல்ல மாறாக தொடக்கநூலில் வரும் பகுதிகளுமே...

அது வேறு எதுவுமல்ல முதல் மனிதனான ஆதாம் படைக்கப்பட்டதும், ஆதாமிலிருந்து முதல் மணவாட்டியான ஏவாள் உருவாக்கப்பட்ட விதமுமாகும்..

தொடக்கநூலில் வாசிக்க தயாராகுங்கள்..

(காண்க)
ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.

அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
(தொடக்கநூல் 2:21-24)

சரி அப்படி என்ன இதில் இயேசுவுக்கு தொடர்பு இருந்துவிடப்போகிறது என்பதை நீங்கள் யோசிப்பீர்கள்...

மூல மொழியில் உள்ள இப் பகுதியில் சரியான அர்த்தத்தில் எடுத்தால் ஆதாம் தூங்கியபோது, அவனின் ஒரு பக்கத்தில் (one of his side)  இருந்து எடுத்து, ஏவாளை உருவாக்கியதாக பொருள் வரும்..

இவர்களே முதல் மணவாளன் மற்றும் மணவாட்டி..

ஆகவே ஆதி கிறீஸ்தவர்களின் விளக்கங்களின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் சிலுவையில் தொங்கிய இயேசுவை தெய்வீக மணவாளணாக (divine bridegroom) பார்த்தார்கள்...

நான்காவது நூற்றாண்டைச்சேர்ந்த புனித அகுஸ்தீனாரின் திருப்பாடல்கள் 138 க்கான விளக்கவுரையில் இதை வாசிக்கலாம்...

"Adam foreshadowed Christ, and as Adam was a type of Christ so too was the creation of Eve from the sleeping Adam a prefiguration of the creation of the Church from the side of the Lord as he slept. For, as he suffered and died on the cross and was struck by a lance, the sacraments which form the church flowed forth from him. By Christ sleeping we also are to understand his passion. As Eve came from the side of the sleeplng Adam, so the Church was born from the side of the suffering Christ."
(Exposition on the psalms 138.2 saint Augustine)

இங்கு புனித அகுஸ்தீனார் குறிப்பிடுவதுபோல முதலாவது மணவாட்டியான ஏவாள் எவ்வாறு தூங்கிக்கொண்டிருந்த ஆதாமிலிருந்து எடுக்கப்பட்ட சதை மற்றும் இரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டாளோ, அதுபோலவே மரணத்தின் உறக்கத்தில் இருந்த புதிய ஆதாமாகிய இயேசுவின் உடலின் பக்கத்திலிருந்து வெளியேறிய இரத்தமும், தண்ணீரும் அவரின் மணவாட்டியான திருச்சபைக்கு உயிரை கொடுக்கிறது..

இங்கு வெளியேறிய தண்ணீர் திருமுழுக்கை அடையாளப்படுத்துகிறது...அது மணவாட்டியை தூய்மைப்படுத்தி புதிய ஒரு வாழ்வை கொடுக்கிறது...

இரத்தம் இங்கு நற்கருணையை அடையாளப்படுத்துகிறது..அது அவரின் மணவாட்டிக்கு உணவாக வாழ்வழிக்கிறது அவரின் உறவில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்கிறது..

இனி மூன்றாம் படிநிலை விளக்கம் குறித்து பார்ப்போம்..

#இயேசுவே புதிய ஆலயம் (temple)

இது அன்றய யூத பாரம்பரியம் ( Jews Tradition) உங்களுக்கு தெரியவில்லையென்றால் இதை புரிந்துகொள்வது மிக கடினமானதே...

இயேசுவின் காலத்தில் இருந்த யூத பாரம்பரியம் குறித்து இங்கு கூறுகிறேன்...தேவையானவர்கள் அதை யூதர்களின் பாரம்பரியம் குறித்த book of mishnah போன்ற நூல்களில் இதை வாசிக்கலாம்...

யூதர்களின் பலிகள், கடவுளுக்கான ஆராதனைகள் மிக மிக பாரம்பரியம் ஒழுங்குமுறை வாய்ந்தவை...உதாரணத்துக்கு அவர்களின் பாஸ்க்கா திருவிழாவை குறிப்பிட்டு சொன்னால், முதலாவது நூற்றாண்டு பாஸ்காவிழா குறித்த யூத நூல்கள் இதை விபரிக்கிறது...அன்றைய நாளில் மட்டும் எல்லா இடங்களிலும் இருந்த யாத்திரையாக வந்த மக்கள் கொண்டுவரும் பலி ஆடுகளின் எண்ணிக்கை ஏறத்தாள 256500...
( இதை குறித்து வாசித்து அறிய விரும்புவோருக்கு *காண்க-Josephus, WAR 6:423–27)

கற்பனை பண்ணிப்பாருங்கள் இவ்வளவு ஆடுகளை பலியிடும் போது எவ்வளவு இரத்தம் வெளியேறியிருக்கும்...

குருக்கள் வெட்டிய ஆடுகளின் இரத்தத்தை பலிப்பீடத்தில் ஊற்றும்போது இரத்தம் வழிந்து செல்ல ஜெருசலேம் தேவாலயத்தின் பலிப்பீடத்தில் ஒரு துவாரம் இருக்கும்...பலிப்பீடத்துக்கு கிழாக செல்லும் இரத்தம் மற்றும் தண்ணீரும் ஜெருசலேம் தேவாலயத்தில் ஒருபக்கமூடாக சென்று தேவாலயமிருந்த மலையில் இருந்து வழிந்து கீழிறங்கும்.

(காண்க)
At the southwest corner of the altar there were two holes like two narrow nostrils by which the blood that was poured over the western base and the southern base used to run down and mingle in the water channel and flow out into the brook Kidron.
(Mishnah, Middoth 3:2)

பலிபீடத்தின் தென்மேற்கு மூலையில் இரண்டு குறுகிய நாசி போன்ற இரண்டு துளைகள் இருந்தன, இதன் மூலம் மேற்குத் தளத்தின் மீது ஊற்றப்பட்ட இரத்தம் தெற்கு அடிவாரத்தினூடாக கீழே ஓடி நீர் வழித்தடத்தில் ஒன்றிணைந்து கிட்ரானுக்கு வெளியேறின.
(மிஷ்னா, மிடோத் 3: 2)

இங்கு கிட்ரான் ஒரு ஜெருசலேம் தோவாலயம் உள்ள மலையோடு கிழக்கே உள்ள பள்ளத்தாக்கு. ஒலிவ மலைக்கும் ஜெருசலேமுக்கும் இடையே உள்ள பகுதி..

இங்கே நாங்கள் கூற வருவது...

சற்று கற்பனை பண்ணிபாருங்கள்.. அன்றைய யூதர்கள் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், இவ் பாஸ்க்கா திருவிழாவின்போது ஜெருசலேம் நோக்கி வரும்போது நீங்கள் எதை கண்டிருப்பார்கள்...

மிகப்பெரிய பாஸ்க்காப் பலி நடந்துகொண்டிருந்த ஜெருசலேம் தேவாலயத்திலிருந்து இவ் பள்ளத்தாக்கினூடாக இரத்தமும், தண்ணீரும்  புரண்டோடி வருவதையே பார்த்திருப்பீர்கள்..
யூதர்கள் இதையே கண்டார்கள்..

இங்கு யோவான், இயேசுவின் விலாவிலிருந்த இரத்தமும் தண்ணீரும் வழிந்துபோது, அதை எழுதும்போது நற்செய்தியில் அவர் இடைமறித்து கூறுகிறார்..

இது உண்மையிலும் உண்மை..இதை பார்த்தவர் சொல்வதும் உண்மை..இவ்வாறு உண்மையாகவே நடைபெற்றது..
வலியுறுத்தி கூறுகிறார்...

இங்கு யோவான் எதை வலியுறுத்தி கூறுகிறார் என்பதை நீங்கள் இலகுவாக புரிந்துகொள்ள கூறுகிறேன்..

இந்த இடத்தில் யோவான் இயேசுவின் உடலையும், ஜெருசலேம் தேவாலயத்துக்கான இணைப்பையும்,
அடுத்து
இயேசுவின் பலி மற்றும் ஜெருசலேம் தேவலயத்தில் நடைபெறும் பலிக்கான இணைப்பையும்  parallel என்பார்கள் அறிந்துகொண்டார் அல்லது புரிந்துகொள்கிறார்...

முன்னர் கூறியது போல, எவ்வாறு பாஸ்கா பலியாட்டில் இருந்து வரும் இரத்தமும் தண்ணீரும் பலிப்பீடத்திலிருந்து ஜெருசலேம் தேவாலயத்தின் பக்கவாட்டினுடாக வழிந்தோடி வருவதைப்போலவே, உண்மையான ஆலயமாம் இயேசுவின் விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வழந்தோடியதை யோவான் இங்கு கூறிநிற்கிறார்...

ஏனென்றால் இயேசுவே உண்மையான ஆலயம்..
இதைத்தான் அவர் ( யோவான் நற்செய்தியாளர்) தன் நற்செய்தியில் இரண்டாவது அதிகாரத்தில் குறிப்பிட்டு எழுதுகிறார்...

இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்"

அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள்.

***ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.( நற்செய்தியாளர் வாசிப்போருக்கு விளங்க அவர் எழுதியது)
(யோவான் நற்செய்தி 2:19-21)

இயேசுவின் உடலே புதிய ஆலயம் அதனால்தான் ஜெருசலேம் தேவாலயத்தோடு பொருத்தமானதாக வருகிறது...

இயேசுவே புதிய ஆலயம் என பார்த்துவிட்டோம்..அப்படியாயின் அந்த ஆலயத்தின் பலிப்பீடம் எங்கே??

அது வேறு எதுவுமல்ல...நம் ஆண்டவரின் பரிசுத்த திரு இருதயமே..

ஜெருசலேம் தேவாலயத்தின் பலிப்பீடத்தில் இருந்து வழிந்தோடிய இரத்தமும் தண்ணீரும் போலவே, இயேசுவின் இருதயத்தினின்று வழிந்தோடும் இரத்தமும்,தண்ணீரும் அவரின் திருச்சபைக்கு உயிரை, வாழ்வை கொடுக்கிறது.. அதுவே இவ் உலகில் பலிப்பீடம்..

இறுதியாக இயேசு எவ்வளவு பாடுபட்டு சிலுவையில் பலியாகி மீட்டார்  என்பதைவிட மிக முக்கியமான ஒன்று உள்ளது...அது கடவுள் எவ்வளவு அதிகமாக நம்மை இந்தளவு அன்புசெய்வதால் இவ்வாறு பாடுபட்டு நம்மை மீட்டார் என்பதேயாகும்...அதனால்தான் நாம் சொல்கிறோம் கடவுள் "அன்பாய்" இருக்கிறார்..

இந்த பகுதியில் யோவான் பார்த்தது நமக்கு சொல்வது கடவுளின் அன்பின் இதயத்தில் இருந்து வழிந்தோடும் இரத்தமும், தண்ணீரும்.. அது இவ்வுலகின்மேல் அவர் கொண்ட அளவற்ற அன்பு மற்றும் கிறிஸ்து தன் மணவாட்டியான திருச்சபை மீது கொண்ட அன்புமாகும்...திருச்சபைக்கு நற்கருனை மற்றும் திருமுழுக்கு வழியாக அவர் கொடுக்கும் வாழ்வுமாகும்..

போப் பெணடிக்ட் சொல்வதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...

கடவுளின் அன்பை பார்க்கவேண்டுமென்றால் விலாவில் குத்தப்பட்ட இயேசுவை பாருங்கள்..அதில்தான் கடவுள் அன்பானவர் (1 யோவான் 4:8) என்ற மறையுண்மையை அறிந்துகொள்ளமுடியும்...

by catholic theologian brant pitre