இயேசுவின் முள்முடி என்பது நாம் படங்களிலும், சுரூபங்களிலும் பார்ப்பது போல அழகாக பின்னப்பட்டவை அல்ல. முட்புதரை அப்படியே தலையில் தூக்கி வைத்து அழுத்துவார்கள். இது எருசலேம் நகரிலிருந்து சுமார் முப்பது மைல்களுக்கு தொலைவிலிலுள்ள நிலப்பரப்பில் மண்டிக்கிடக்கும் முட்புதர்.
எரிக்கோ நகருக்கும், சாக்கடலுக்குமிடையே வளரும் முட்புதர். முள்முடி சூட்டப்பட்ட நிகழ்வில் இயேசுவின் தலையும் தாக்கப்படுகிறது. முள்முடி சூட்டப்பட்டபோது முட்கள் அவரது தலையைப் பதம் பார்த்ததால் மீண்டும் ஒரு முறை இயேசு இரத்தம் சிந்துகிறார். முட்கள் கண்களையும் பதம்பார்த்திருக்கும். மயக்கத்தோடு இருந்த அவரது பார்வையும் மங்கியிருக்கும்.
பிற்காலத்தில் பேரரசன் கான்ஸ்டாண்டி நோபிள் கண்டுபிடிக்கப்பட்ட முள்முடியை பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் மன்னனுக்கு அன்பளிப்பாக வழங்கினார். ஜெபமன நிலையோடு பெற்றுக்கொண்ட மன்னர், காலணி அணியாமல் சேன் என்ற இடத்திற்கு அதனை கரத்தில் ஏந்திச் சென்றார். அழகான சிற்றாலயம் எழுப்பி அங்கு அந்த முள் கிரீடத்தை வைத்தார். அவ்வப்போது தனது அரச கிரீடத்தை முள்முடியோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர், " முள்முடிக்கு முன்னால் என் அரச கிரீடம் ஒன்றுமில்லை " என்பாராம்.
நன்றி : புளியம்பட்டி அந்தோனியார் மாதஇதழ்