தாழ்ச்சி

"நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன் என்று என் னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்'' (மத்.11:29); "உங்கள் ஜீவியம் கிறீஸ்து நாதரோடு சர்வேசுரனுக்குள் மறைந்திருக்கிறது'' (கொலோ.3:3).

நமது சுபாவ வாழ்வு மிகவும் அற்பக் காரியம். இந்த வாழ்வை வாழ்வதில் என்ன பயன் என்று முதலாய்க் கேட்கக் கூடும். விசேஷ மாய் அப்போஸ்தலன் இந்த அற்பக் காரியத்தோடு திருப்தியடைய முடியாது. சேசுநாதரிடமும், அவராலும் வாழ்ந்து, அவருடைய இருதய மோட்சத்தில் மூழ்கிக் கிடப்பதே அவனது உண்மையான நோக்கம். வாழ்வு என்ற பெயருக்குரியது இது ஒன்றுதான். வரப் போகிற நித்திய ஜீவியத்துக்கு உகந்த ஆரம்பம் அதுவே.

ஆனால், இந்த உன்னத நோக்கங்களை அடைவதற்கு சிகரங் களின்மேல் பறந்து செல்வது அவசியமில்லை என்றிருப்பது நமக்கு நல்லதுதான்; நாம் சேசுநாதரைப் போல், அதற்கு மாறாய், கீழே இறங்கி, மறைந்து நம்மையே நிர்மூலமாக்கிக் கொள்ள வேண்டும். நம்மை உயர்த்தும்படி அவர் கன்னிமாமரியின் உதரத்தில் இறங்கி வந்தார் என்றும், அதிலிருந்து வைக்கோல் கொட்டிலுக்கு வந்தார் என்றும், சிலுவையில் தம்மையே பரித்தியாகம் செய்தார் என்றும், இன்னும் தம் மனிதரூபம் முதலாய்த் தெரியாதபடி நற்கருணையில் தம்மைத் தாழ்த்தி மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் யோசித்துப் பார். அவரது மகத்துவம் அப்படிப்பட்டது. நம்முடை யதும் அவ்விதமே இருக்க வேண்டும். நான் என்னையே சிறியவ னாக்கிக் கொள்வது மிகவும் அவசியம். தேவ ரீதியில் இதுவே முதன் மையும் கடைசியுமான படி. ஆனால் அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவதற்கு, நாம் மிஞ்சின மகத்துவம் உள்ளவர்களாயிருக்கிறோம். ""மகத்துவம்,'' ""அர்ச்சியசிஷ்டவர்கள்'' என்ற வார்த்தைகள் ஒன்றுக் கொன்று பொருத்தமற்றவை. அர்ச்சியசிஷ்டவன் ஆக வேண்டுமானால் சிறியவனாக வேண்டும். பெரிய அர்ச்சியசிஷ்டவர்களாக வேண்டு மானால், நாம் மிக மிகச் சிறியவர்களாக வேண்டியது அவசியம். தேவ மகத்துவம் ஒன்றே மகத்துவம்; குறைந்து மறைந்து போவதென்றே அது எப்போதும் அர்த்தங் கொள்ளும். ஆதலால் நாம் தேவரூபமாக மாறிப் போக விரும்புவோம் என்றால், நம்மை நாம் வெகு சிறியவர்களாக்கத் துவக்க வேண்டும். அவரை மற்ற ஆத்துமங்களுக்குக் கொடுக்கவும், அவரது சிநேகிதர்களும், அப்போஸ்தலர்களுமாக ஆவதற்கும், நாம் அப்பத் துண்டுகளாக இக்கணமே நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். அந்த அப்பத் துண்டு சேசுநாதரே. வார்த்தையானவர் தம்மை முழுவதும் நமக்குக் கொடுப்பதற்காக, அப்பத்தின் ரூபமாக நம்மிடம் வருகிறார் என்பதை யோசித்துப் பார். எஜமானரை விட நாம் பெரியவர்கள் அல்ல. நாம் புதுமைகள் செய்ய வேண்டுமாகில், இந்த வரப்பிரசாதப் புதுமையை முதன்முதல் செய்ய வேண்டும். அதாவது அவர் நம்மிலும் ஆத்துமங்களிலும் வளரும்படியாக, நாம் குறைய வேண்டும்.

உலகம் முழுவதிலும் பரவிக் கிடக்கிற ஆயிரக்கணக்கான நற்கருணைப் பேழைகளில் மறதிக்கு ஆளாயிருக்கிற மகத்துவ அரசரின் மகிமை என்னவென்று சிந்தித்துப் பார். ஏழையிலும் பரம ஏழையாக, மவுனமாய் வாய் பேசாமல், அமைதியாயிருந்து புறக் கணிக்கப்பட்டிருப்பதுதான் அவருக்குள்ள மகிமை. சுயபற்றுதலும், பேராசையுமுள்ள நாம் எளிய பேழைக்கு முன்பாகத் தியானித்தால், நாம் வெட்கப்பட்டு, நம்மையே நொந்துகொள்ள வேண்டியதில் லையா? மாம்சமான வார்த்தையானவர் தூசிக்குச் சமமாய்த் தம்மைத் தாழ்த்தியிருக்க, மதிப்பு, பட்சம், மகிமை, பெருமை, கீர்த்தி நமக் குரியதென்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே. திவ்ய நற்கருணை யிலிருக்கிற சேசுநாதருக்கு முன்பாக நாம் இவ்வித நினைவுகளுக்கு இடங்கொடுப்பதைப் பற்றி வெட்கி நாணுவோமாக! அவர் தம்மை மறந்து போவதுபோல், நாமும் நம்மை மறந்து விடவும், அந்த வீண் எண்ணங்களை அகற்றி விடவும் ஒரேயொரு உரிமையைப் பற்றி, அதாவது ஒன்றுமில்லாதிருக்கிற உரிமையைப் பற்றி சந்தோஷப் படவும் அவருக்கு வாக்களிப்போமாக! ""நான் சாந்தமும் மனத் தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கிறேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்'' (மத்.11:29). பாரே-லே-மோனியாவில், தமது ஊழியக் காரியான அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்கும், அவள் வழியாகத் தமது அப்போஸ்தலர்களுக்கும் அவர் கற்றுக்கொடுத்த பாடம், ஆழ்ந்த தாழ்ச்சி என்ற இந்தப் பாடம்தான்.

ஓ சேசுவே! என்னைக் காயம்பட்ட உம் நெஞ்சுக்குள் வைத்து மறைத்துக்கொள்ளும்; பிறர் என்னை நேசித்து மதிக்க வேண்டு மென்று எனக்குள்ள ஆவலைப் பிடுங்கி எறியும்; நான் எதிலும் முன் னின்று பேரும் புகழும் பெற வேண்டுமென்ற தீய விருப்பத்தை என்னைவிட்டு நீக்கியருளும். நான் உமது திரு இருதயத்தின் சிநேக அக்கினியின் சிறு பொறியும், தூசியின் அணுவும் ஆகும் வரைக்கும் என்னைத் தாழ்த்தியருளும். சிருஷ்டிகளையும், சகலத்தையும், என்னையுமே அத்திரு இருதயத்தினுள் மறந்துவிடுவேனாக!