மாதாவின் தோற்றம், குரல், கண்கள்

மாதாவின் தோற்றம் 

பரிசுத்த கன்னிகையின் தோற்றமே ஒரு நிறைந்த மோட்சமாக இருந்தது. அவர்களிடம் திருப்தி அளிப் பதற்குத் தேவையான அனைத்தும் இருந்தன. ஏனென்றால் பூமி மறக்கப்பட்டு விட்டது.

இரண்டு ஒளிகள்

மாதா இரண்டு ஒளிகளால் சூழப்பட்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த முதல் ஒளிச்சூழல், மாதாவுக்கு அருகாமையில் இருந்தது. அது நாங்கள் இருந்த இடம் வரையிலும் பரவியிருந்தது. அது மிக அழகுடன் மின்னிப் பிரகாசித்தது. இரண்டாவது ஒளித்திரள் மாதாவைச் சுற்றி எங்களையும் உள்ளடக்கியிருந்தது. அது மின்னுதல் இல்லாமல், பூமியில் பரிதாபத்துக்குரிய நம் சூரியனை விட அதிகப் பிரகாசமாயிருந்தது. இந்த ஒளி பிரகாசங்கள் எல்லாம் கண்களை எவ்வகையிலும் பாதிக்கவில்லை, களைப்படையச் செய்யவுமில்லை.

மாதாவின் குரல் 

மாதாவின் குரல் மென்மையாயிருந்தது. அது மன வசீகரமாய், இன்பம் நிரப்புவதாய், இதயத்திற்கு இதமா யிருந்தது. அது திருப்தியளித்தது. எல்லாத் தடைகளையும் வென்று மென்மைப்படுத்தி இங்கிதமளித்தது. அந்த நேர்த்தியான குரலை நான் உண்பதை நிறுத்தவே முடியா தது போலிருந்தது. அதில் என் இருதயம் நடனம் செய்தது அல்லது அவர்களை நோக்கிச் சென்று அவர்களுக்குள் கரைந்துவிட வேண்டும் போலிருந்தது.

மாதாவின் கண்கள் 

நம் இனிய தாயான பரிசுத்த கன்னிகையின் கண்களோ மனித மொழிகளில் வர்ணிக்க முடியா தவை. அவற்றைப் பற்றிக் கூற ஒரு செராபின் சம்மனசு தான் வேண்டும். அதைவிடக் கூடுதலாகவே தேவைப் படும் - இந்த மாசற்ற கன்னிகையை, கடவுளுடைய சர்வ வல்லமையின் தலைசிறந்த கைவேலையை உருவாக்கிய கடவுளின் மொழியே தேவைப்படும். மகத்துவமான மரியாயின் கண்கள் மிக அபூர்வமான பட்டை தீட்டிய சிறந்த வைரமணிகளை விடவும், இரத்தினக் கற்களை விடவும் ஆயிரம் மடங்கு அதிக அழகுடையவை. அவை இரண்டு சூரியன்களைப் போல் ஒளி வீசின. அவை மென்மையுடையன; மென்மையாகவே இருந்தன. கண் ணாடி போல் தெளிவாயிருந்தன. அவர்களின் கண்களிலே நாம் மோட்சத்தைக் காணலாம். அவை நம்மை அவர்கள் வசமாக இழுத்தன. அவர்கள் அப்படி இழுக்கவும் தன்னையே கொடுக்கவும் விரும்புவது போலிருந்தது.

எவ்வளவுக்கு நான் பார்த்தேனோ அவ்வளவிற் கதிகமாய் மேலும் பார்க்க விரும்பினேன். எவ்வளவிற்கு நோக்கினேனோ அவ்வளவிற்கதிகமாய் அவர்களை என் பலமெல்லாம் கொண்டு நேசித்தேன்.

அக்கண்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்தின் வாசல் போன்றிருந்தன. அதிலிருந்து ஆன்மாவை மேலே உயர்த்தும் அனைத்தையும் காணாமல். என் கண்கள் கடவுளின் தாயின் கண்களைச் சந்தித்த போது எனக்குள்ளே ஒரு மகிழ்ச்சியான அன்பின் எழுச்சியைக் கண்டேன். நான் அவர்களை நேசிக்கிறேன் என்றும் அன்பினால் நான் உருகிப் போகிறேன் என்றும் என்னுள் ஒரு அறிக்கை எழக் கண்டேன். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட போது, எங்கள் கண்கள் அவற்றின் தன்மைப் படியே பேசின. அவர்களை எப்படி நேசித்தேனென்றால் அத்தாயின் கண்களின் நடுவே அவர்களை நான் முத்த மிட்டிருப்பேன். அத்திருவிழிகள் என் ஆன்மாவைத் தொட்டு தங்கள் பக்கமாக அதை இழுத்து அதை அவர்களின் ஆன்மாவுடன் ஒன்றாய் உருக்கிவிடுவது போல் இருந்தது. மாதாவின் கண்கள் என்னில் முழுவதும் ஒரு இனிய நடுக்கத்தை ஏற்படுத்தின. அவர்களுக்கு மிகச் சிறிய அசௌகரியத்தையும் கொண்டு வரக்கூடிய மிக மெல்லிய அசைவையும் செய்ய நான் பயப்பட்டேன்.

மிகப் பரிசுத்த கன்னிகையின் கண்களின் காட்சி ஒன்றே ஒரு சிருஷ்டியின் மோட்சத்தை அமைப்பதற்கும் போதுமாயிருக்கும். ஆன்மாவை, இவ்வுலகின் வாழ்வின் நிகழ்ச்சிகளில் எல்லாம் கடவுளின் சித்தத்தால் நிரப்பப் போதுமாயிருக்கும். ஆன்மாவை ஆராதனை, நன்றி, மன்றாட்டு, பாவப் பரிகார முயற்சிகளை இடைவிடாமல் செய்ய வைக்கப் போதுமாயிருக்கும். அந்தக் கண்களின் பார்வையே ஆன்மாவை கடவுளிடமே பதிந்திருக்கச் செய்து விடும். முக்கியமாகத் தெரிகிற இவ்வுலகத்தின் காரியங் களை, அவை ஒன்றுமில்லை, குழந்தை விளையாட்டு என்று கருதவைத்து, ஆன்மாவை உயிருள்ள மரண நிலையில் வாழச் செய்து விடும். அவ்வான்மா யாருடைய பேச்சையும் கேட்க விரும்பாது. அவர்கள் கடவுளைப் பற்றிப் பேசா விட்டால் - அவருடைய மகிமையைப் பற்றிய காரியங் களைப் பேசாவிட்டால்.

மாதா உலகத்தில் காண்கிற ஒரே தீமை பாவமே. கடவுள் அவர்களைத் தாங்கியிராவிட்டால், அவர்கள் துயரத்தால் இறந்துவிடுவார்கள் - ஆமென்.