ஜெபமாலைக்கு ஏன் இவ்வளவு வல்லமை?

ஏற்கனவே ஜெபமாலையின் ஆசிரியர்கள்( பிதா, சுதன், பரிசுத்த ஆவி மற்றும் தேவ அன்னை) யார்? ஜெபமாலை யாருக்கு (  தூய தமதிருத்திருத்துவம்) மகிமை சேர்க்கிறது? யாருக்கு வலிமை (மாதா) சேர்க்கிறது? ஏன் ஒருத்தர் ஜெபமாலை ஜெபித்தாலும் உலகமே காப்பாற்றப்படுகிறது (ஜெபமாலை பன்மையில் ஜெபிக்கப்படுவதால்) என்று நிறையவே பார்த்துவிட்டோம்..

இப்போது ஜெபமாலையில் இருக்கும் பைபிள் வசனங்களைப் பார்ப்போம்.. ஏனென்றால் இருபுறமும் கருக்கு வாய்ந்த வலிமையான ஆயுதம் ஆண்டவருடைய திருவார்த்தை என்பது எல்லோருக்கும் தெறியும்…

1. பரலோக மந்திரம் முழுக்க முழுக்க ஆண்டவர் இயேசு சுவாமி கற்றுக்கொடுத்தது ( மத்தேயு 6 : 9-13)

2. “அருள் நிறைந்தவளே வாழ்க,  ஆண்டவர் உம்முடனே “ (லூக் 1:28)

3.  “பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டள் நீரே, உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே “ லூக் 1: 42

4.     அர்ச்சியசிஷ்ட மரியாயே ! சர்வேசுவரனுடைய மாதாவே! ( என் ஆண்டவருடைய தாய், லூக் 1: 43)

அதன் பின் வரும் ஜெபங்கள் மாதாவிடம் ஆண்டவர் இயேசுவிடம் வேண்டிக்கொள்ள ஜெபிக்கிறோம் ஆதலால் இயேசு சுவாமியே பெரியவராகிறார்.. மாதா முன்னால் நிறுத்தப்படுவது போல் தெறிந்தாலும், முன் நிறுத்தப்படுபவர் இயேசு ஆண்டவரே.. அதனால்தான் முன்னமே சொன்னோம்.. மகிமைப்படுத்தப்படுபவர்கள் பிதா,சுதன், பரிசுத்த ஆவி. அதனால் வலிமை கிடைப்பது மாதாவிற்கு.

மேலும் வார்த்தையாக இருந்த சுதனாகிய சர்வேசுரனை(இயேசுவை) மனுவுருவாகக் கொண்டுவந்ததே இந்த மங்கள் வார்த்தைதான். அதைச் சொல்லும்போது தமத்திருத்துவம் மகிழ்கிறது..

புதிய ஏற்பாட்டின் அடித்தளக் கல் “அருள் நிறைந்த மரியே வாழ்க!” ஜெபம்தான் (Foundation stone)

அடுத்து ஜெபமாலையச் சொல்லச் சொல்லி பைபிள் சொல்கிறதா? அதாவது மாதாவை புகழச்சொல்லி பைபிள் சொல்கிறதா?

“ இதோ ! இந்நாள்முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுடையாள் எனப்போற்றுமே “ ( லூக் 1:48)

ஆண்டவர் இயேசுவை வயிற்றில் சுமந்தவாறே மாதா பாடிய ஒரே பாடலில் அதுவும் தூய ஆவியின் தூண்டுதலோடு எழுதப்பட்ட வேதாகமத்தில் இருப்பதையே கத்தோலிக்கர்களாகிய நாம் செய்து வருகிறோம்.

அதாவது மாதாவைப் புகழ்கிறோம்.. மாதா பக்தியும், ஜெபமாலை பக்தியும் தூய தமத்திருத்துவத்தின் விருப்பத்துடன் கத்தோலிக்கத் திருச்சபை ஏற்படுத்தியது..

சரி இப்போது மாதாவை யார் புகழத் தேவையில்லை..?

தலைமுறையினர் யாருக்கு இல்லையோ அவர்கள் புகழத் தேவையில்லை..

“ எங்கள் தலைமுறை எப்படிப்பட்டதுன்னு தெறியுமா? “ என்று பேசுகிறோமே.. யாருக்கு தலைமுறை இல்லை.. மனிதனைத் தவிர எந்த உயிரினத்திற்கும் தலைமுறை இல்லை..

நீ மனிதன் என்றால்… நீ கிறிஸ்தவன்(ள்) என்றால்… உனக்கு தலைமுறை இருக்கிறது என்றால் நீ மாதாவைப் புகழ்ந்துதான் ஆக வேண்டும்.. ஜெபமாலை சொல்லித்தான் ஆக வேண்டும்..

“ திரும்ப திரும்ப சொல்லும் ஜெபம் மட்டும் அல்ல… திரும்ப திரும்ப சொல்லியே ஆக வேண்டிய ஜெபம் ஜெபமாலை “

குடும்ப ஜெபமாலை நின்ற பின்புதான் இத்தனைப் பிரச்சனைகள்.. எத்தனையோ பிரச்சனைகள்..

ஜெபமாலையின் புண்ணியங்களையும், வல்லமைகளையும், அதிசயங்களையும் எவ்வளவோ பார்த்திருக்கிறோம்..

1. முக்கியமாக சாத்தானின் கோட்டையை உடைப்பது ஜெபமாலை..

2. நரகத்தின் அடி ஆழம் வரை சென்று ஆட்டங்கொள்ளச் செய்வது ஜெபமாலை..

 3. அவனை குடும்பத்தை விட்டும், குடும்ப உறுப்பினர்களை வீட்டும் ஓடச்செய்வது ஜெபமாலை..

4. தீய சக்திகளையும், அதன் சதிகளையும் அடித்து நொறுக்குவது ஜெபமாலை..

கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் ஜெபமாலை சொல்லமால்.. சீரியல் பார்த்து பார்த்து ஜெபமாலையை ஒதுக்கி கொட்டாவி விட்டு விட்டு தூங்கியதால் இவ்வளவு பிரச்சனைகள்.. உலகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெபத்திற்கு கொடுக்காததால் இவ்வளவு பிரச்சனை..

ஒரு 20 நிமிடங்கள் (ஒரு சீரியலிலும் பாதி நேரமே) கொடுக்காததால் இந்த நிலமை..

இப்போதாவது விழிப்போம்.. கேளிக்கைகளை ஒதுக்குவோம்..

நம் குடும்பம் உருப்படவேண்டுமானால்… தமிழகம் உருப்பட வேண்டுமால்.. இந்தியா.. உருப்பட.. ஏன் உலகமே நல்ல நிலமைக்கு வர.. நாமும் நன்றாக இருக்க வேண்டுமானால் குடும்ப ஜெபமாலையை நிறுத்தாமல் தொடர்ந்து ஜெபிப்போம்..

“ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை…"

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !