அர்ச். இராயப்பர் திருச்சபைக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - பாயிரம்

தலையான அப்போஸ்தலராகிய அர்ச். இராயப்பர் இந்த 2-ம் நிருபத்திலே தம்முடைய மரணம் அடுத்திருக்கிறதை வெளிப்படுத்தி, எவ்வித துர்க்குணங்களையும், விசேஷமாய் அந்நாட்களிலிருந்த பதிதர்களுடைய துர்க்குணங்களையும் விசுவாசிகள் விலக்கி நடக்கக் கற்பித்துப் பற்பல புத்திமதிகளையுஞ் சொல்லி, அவர் மரணமான 66-ம் வருஷத்தில் உரோமாபுரியிலிருந்து இதை எழுதினார்.