மாதாவின் கழுத்தில் ஒரு மிகச் சித்திர வனப்பான பாபட்ட சுரூபம் தொங்கியது. அது பொன்னால் செய்யப்பட்டிருந்ததாகத் தோன்றியது, (நான் பொன் தகட்டால் மூடப்பட்டிருந்ததென்று கூறாமல் பொன் சுரூபம் என்கிறேன். ஏனென்றால் பொன் தகடு பொதிந் ததைவிட பொன்னால் செய்யப்பட்ட பொருள்கள் அவற்றின் பல பொன் சாயைகளால் என் கண்களுக்கு அதிக ரம்மியமாக இருப்பதை சில சமயம் பார்த்திருக்கிறேன்.
இந்த பிரகாசமான அழகிய சிலுவையில் கிறீஸ்துவின் உருவமிருந்தது. அது சிலுவையில் அறையப்பட்ட நம் ஆண்டவர்தான். சிலுவையின் கைகளின் அற்றத்தில், ஒன்றில் ஒரு சுத்தியலும் ஒன்றில் ஒரு குற்டும் இருந்தன. கிறிஸ்துவின் உருவம் தோலின் நிறமாயும் மினுக்கமாக ஒளியுள்ளதாயும் இருந்தது. ஆண்டவரின் சரீரம் முழுவதிலுமிருந்து வீசிய ஒளிரும் கதிர்கள் என் இருதயத்தை, அவருக்குள் கரைந்து விட வேண்டும் என்ற ஆசையால் ஊடுருவின. சில சமயங்களில் கிறிஸ்து மரித்தவராகக் காணப்பட்டார். அவருடைய சிரசு முன்னால் சாய்ந்து ஆணிகளால் அது சிலுவையுடன் பிணைக்கப் படாதிருந்தால் பிரிந்து விழுந்து விடுவது போலிருந்தது.
எனக்கு மிகவும் பரிதாபமாயிருந்தது. அவருடைய அறியப்படாத அன்பை உலக முழுவதற்கும் எடுத்துச்சொல்ல நான் விரும்பினேன். மானிட ஆன்மாக்களில் மிகுந்த இதயப் பூர்வமான அன்பையும் கடவுள் மீது நன்றியையும் புகுத்த ஆசித்தேன். கடவுள் எப்படி யெல்லாம் இருக்கிறாரோ, எப்படியெல்லாம் இருப்பாரோ அப்படி அவர் இருப்பதற்கு நாம் அவருக்கு எவ்வகை யிலும் தேவையில்லையே! என்றாலும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத அவருடைய அன்பு தம்மை மனிதனாக்கி மரணமடைய விரும்பியது. ஆம், நம்முடைய ஆன்மாக்களிலும் ஞாபகத்திலும், நம் மீது அவருக் கிருக்கிற தாகமுள்ள அன்பைக் கூடுதல் பதிக்கும் படியாக மரணமடைய ஆசித்தார். நம் நல்ல இரட் சகருக்கு நம் மேலுள்ள அன்பை வெளிப்படுத்துவதில் ஓ நான் எவ்வளவு மோசமாயிருக்கிறேன்! ஆயினும் இன்னொரு முறையில், நாம் வெளிப்படுத்த இயலாதிருக்கிற அன்பை உணரக் கூடுமாயிருப்பதைப் பற்றி எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறோம்.
மற்ற சில வேளைகளில் கிறீஸ்து அதிலே உயிருள்ளவராகக் காணப்பட்டார். அவருடைய சிரசு நேராக இருந்தது. கண்கள் திறந்திருந்தன. அவர் தம்மாலேயே சிலுவையில் இருப்பதாகக் காணப் பட்டார். சில சமயம் அவர் பேசுவதைப் போல் தோன்றினார், அவர் நமக்காகவே, நம் அன்பிற்காகவே சிலுவையில் இருப்பதாகக் காண்பிக்க விரும்பினார். நம்மைத் தமது அன்பை நோக்கி இழுப்பதற்காக, எப்போதும் அதிக அன்பை நமக்குக் கொடுக்க இருப்பதாக, 33 ஆண்டுகளின் தொடக்கத்திலும், 33 - ம் ஆண்டிலும் எப்போதும், இன்றும் என்றென்றைக்கும் அவரின் அன்பு அப்படியே இருக்கும் என்று காட்ட விரும்பினார்.