பிரமாணிக்கம்

பிரமாணிக்கம் என்பது புனித அகுஸ்தீனாரின் கருத்துப்படி 'மண ஒப்பந்தமானவர்கள் களவில் வேறு எவரோடும் பால் உறவு கொள்ளலாகாது'. 'திருமண ஒப்பந்தத்தின்படி ஆணும்  பெண்ணும் இனி இருவர் அல்லர், ஒரே உடல்', இருவரும் நெருங்கி இணைந்து செயல்களிலும் ஒன்றிப்பதால் ஒருவருக்கொருவர் உதவியும் ஊழியமும் செய்கின்றனர். தங்கள் ஒன்றிப்பை உணர்கின்றனர். நாளுக்கு நாள் அவ்வுணர்வில் வளர் கின்றனர். ஒருவருக்கொருவர் தங்களையே கொடையாக அளித்தலே இந்த நெருங்கிய ஒன்றிப்பு. எனவே இவ் வொன்றிப்பும் குழந்தைகளின் நலனுமே முழுப் பிரமாணிக்கத்துக்கும் பிரிக்க முடியாத ஒன்றிப்புக்கும் காரணமாய் உள்ள ன. (G. S. n. 48) .

அன்னியோன்னிய பிரமாணிக்கமானது இறைவனால் நிறுவப்பட்ட தம்பதிகளின் சமத்துவத்திலேயே கட்டப் படுகின்றது. ''கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண் டிய கடமையைச் செய்யட்டும், அவ்வாறே மனைவியும் கணவனுக்குக்கடமைசெய்யட்டும், மனைவிக்குத்தன்உடல் மேல் உரிமையில்லை. கணவனுக்கே அந்த உரிமை உண்டு. அவ்வாறே கணவனுக்கும் தன் உடல் மேல் உரிமை யில்லை. மனைவிக்கே அந்த உரிமை உண்டு. ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமையை மறுக்காதீர் கள். செபத்தில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலத்துக்கு அக்கடமையைச் செய்யாமலிருக்கலாம். ஆனால் அதற்கு இருவரும் உடன்பட வேண்டும். அதன் பின் முன் போற் கூடி வாழுங்கள். இல்லாவிட்டால் தன்னடக் கக் குறைவைப் பயன்படுத்திச் சாத்தான் உ ங் க ளை ச் சோதிப்பான்''. (1 கொரி. 7: 3-5)

தம்பதிகளிடையே நிலவும் பிரமாணிக்கமானது, பதி னோராம் பத்தி நாதரின் கூற்றுப்படி ஒருமை, திருமணக் கற்பு, பரிவன்பு, பெருந்தன்மையுங் கௌரவமுமுள்ள பணிவு போன்ற பண்புகளை உள்ளடக்குகிறது. பிர மாணிக்கம் என்ற பெயரில் தம்பதிகளிடையே பிரதா னமாக நிலவ வேண்டியது அசைக்க முடியாத ஒருமைப் பாடு. இந்த ஒருமைப் பாட்டின் சி ற ந் த எடுத்துக் காட்டு ஆதிப் பெற்றோரின் விவாகத்தில் இனிதே விளங் குகின்றது. அதாவது, உலகைப் படைத்தவரின் ஆணை யின்படி விவாகமானது ஓர் ஆணுக்கும் ஒரு பெண் - ணுக்கும் இடையில் நிலவ வே ண் டி ய து என்பதே. * 'ஆகவே அவர்கள் இருவர் அல்லர் ஒரே உடல்'' (மத்: 19. 6) என்ற எங்கள் ஆண்டவர் யேசுக்கிறிஸ்து வின் போதகத்தின் அடிப்படையில் திரிதேந்து திருச் சங்கமும், ' 'இப்பந்தனத்தால் இருவர் மாத்திரமே இணைக்கப்பட்டு ஓர் உடல் ஆகின்றனர்'' என்கிறது.

ஆகவே, எங்கள் ஆண்டவர் யேசுக்கிறிஸ்து எல்லா வித பலதாரப் பழக்கத்தையும், ஏககால் அல்லது வரிசை முறைப்படியுள்ள பல கணவர் பழக்கத்தையும் கற்பு நெறிக்கெதிரான எல்லாச் செயல்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளார். அது மட்டுமன்று, மெய்விவாகத்தின் எல்லைப் புறங்களையும் புனிதமாகப் பேணும் படி மன தில் எழும் எந்தவித தீய! எண்ணங்களையும் ஆசைகளையும் விலக்கி இருக்கின்றார். ''ஆனால் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு பெண்ணைக் காம இச்சையோடு நோக்குப் வன் எவனும் ஏற்கனவே அவளோடு விபசாரம் செய் தாயிற்று'' (மத்.5 : 28). தம்பதிகளுள் ஒருவரின் சம் மதங் கூட ஆண்டவர் யேசுவின் வார்த்தைகளை அர்த்த மற்றவையாக்க முடியாது. மனிதன் எவனும் மாற் றவோ மறைக்கவோ முடியாத முறையில் அவை இயற்கையோடியைந்த தெய்வீக சட்டத்தின் பிரகடன மாகும். (Casti Connubii n 20-21)

திருமண அன்பு தம்பதிகளின் எல்லாக் கடமைகளை யும் ஊடறுத்துச் செல்ல வேண்டியதுமன்றிக் கிறிஸ்தவ திருமண வாழ்வில் முக்கிய இடத்தையும் வகிக்கின்றது. திருமணப் பிரமாணிக்கம் என்பது கணவனும் மனைவி யும் சிறப்பு மிக்க அன்பினாற் பிணைக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமாம். விபசாரிகள் ஒருவருக்கொருவர் அன்பு செய்வது போல் இவர்கள் அன்பு செய்யப்படாது. கிறிஸ்து அன்பு செய்தது போலவே அன்பு செய்ய வேண்டும். இதுவே புனித சின்னப்பரின் கட்டளையுங் கூட, ''கணவர்களே கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல நீ ங் க ளு ம் அன்பு செய்யுங்கள்.'' (எபே. 5' : 25) நிச்சயமாகவே கிறிஸ்து திருச்சபையை எல்லை மீறிய வகையில் அன்பு செய்தார். ஆயினும் தமது சொந்த நலனுக்காக அன்று. ஆனால் தமது பத் தினியாகிய திருச்சபையின் நலனுக்காகவேயாம். கணத் தில் மறைந்து விடும் ஆசையிலோ அல்லது உடல் இன் பத்திலோ அந்த அன்பு எழுப்பப்படவில்லை. காற்றோடு காற்றாய் மாறும் வார்த்தைகளோடு இந்த அன்பு நிற்ப தில்லை. அது இதய ஆழத்தில் இருந்து சுரந்து எழும் அன்பாம். உண்மை அன்பு  ெச ய லிற் பிரதிபலிப்பது போல இந்த அன்பும் செயல் வடிவம் எடுத்து நிற்கும். இந்த அன்பு கணவன் மனைவியரின் ஆன்ம வாழ்வை வளம் பெறச் செய்வதையும் முழுமைப் படுத்துவதை யும் உயரிய நோக்கமாய்க் கொள்ள வேண்டும். அவர்களின் கூட்டு வாழ்வு அறச் செயல்களைச் செய்வதற்கும் இறைவனையும் அயலவனையும் நேசிப்பதற்கும் உ த வி புரியும். இந்த அன்பிலேயே முழுச்சட்டமும் இறைவாக்கு உபதேசங்களும் அடங்கியிருக்கின்றன. (Casti Conubii 1 23)

திருமண அன்பைப் பிரித்துக் காட்டும் சில சிறப்பு அம் சங்களையும் அடையாளங்களையும் இங்கு எடுத்துக் கூறு தல் பயனுள்ளதாகும். முதலாவது, ' ' இந்த அன்பு ஓர் ஆளிடமிருந்து மற்றோர் ஆ ளு க் கு உள்ளத்திலிருந்து எழும் பாசத்தாற் காட்டப்படுவதால் மிகவும் மனிதத் தன்மை வாய்ந்தது. இவ்வன்பு முழு ஆளின் நன்மை யையும் கருத்திற் கொண்டிருப்பதால் அதைப் பலப் டுத்தும் உடல், ஆன்ம செயல்களுக்கு ஒரு தனிப்பட்ட மாண்பைத் தருகிறது. .............. இத்தகைய அன்பு மனித அம்சங்களையும் தெய்வீக அம்சங்களையும் ஒன்றிக்கச் செய்து, மணமக்கள் பாசமிக்க அன்பிலும், செயலிலும் ஒருவர் ஒருவருக்குச் சுதந்திரமாகத் தம்மையே கைய ளிக்க அவர்களை இட்டுச் செல்கிறது'' (G. S. n. 49 )

''அடுத்தபடியாக, இவ்வன்பு முழுமையானது, அதாவது அது கணவனுக்கும் மனைவிக்குமிடையே நில வும் ஒரு சிறப்பான நட்புறவு. இ த ன் காரணமாக அவர்கள் எவ்வித கட்டுப்பாடோ அல்லது சுயநலப் பற்றோ இன்றி யாவற்றையும் தங்களுக்குள் உ த ர ர குணத்துடன் பகிர்ந்து கொ ள் கி றா ர் க ள். தனது வாழ்க்கைத் துணைவரை உண்மையாக அன்பு செய்யும் எவரும் அவரிடமிருந்து பெ று ம் கொடைகளுக்காக மாத்திரமன்று, அவருக்காகவே அவரை அன்பு செய் கின்றனர். அதே வேளையில் தன்னை அவருக்கு முற்றாக அளித்து அவரை வளம் பெறச் செய்வதில் இன்பமடை கின்றார், ('Humanae Vitae” n. 9)

''இந்த அன்பு அவர்கள் வாழ்கை முழுவதிலுமே பரவி இருக்கின்றது. மேலும் அது தாராளமாக இயங் குவதால், வளர்ந்து நிறைவு பெறுகின்றது. ......... இந்த அன்பு திருமணத்திற்கே உரிய  ெச ய லி ற் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டு, நிறைவு பெறுகின்றது ஆகையால், மணமக்களைத் தூய்மையான மு  ைற யி ல் நெருங்கி ஒன்றிக்கச் செய்யும் செயல்கள் நேர்மையா னவை, மாண்பு பெற்றவை. உண்மையில் மனித இயல் புக்குரிய முறையில் இச் செயல்கள் நடைபெறும் பொழுது, இவைகள் மணமக்கள் ஒருவர் மற்றொருவ ருக்கு மகிழ்ச்சியோடும் நன்றி உணர்ச்சியோடும் தங்க ளையே கொடையாக அளிப்பதைக் குறித்து காட்டுவது டன், அக்கொடையைப் பேணி வளர்க்கவும் செய் கின்ற ன.'' (G. S. n. 49)

அடுத்ததாக, திருமண அன்பு மரண பரியந்தம் பிர மாணிக்கமும் தனித்துவமும் உடையதாகும் (IIumanae Vitae n. 9). ''இந்த அன்பு ஒருவருக்கு ஒருவர் அளிக் கும் வாக்குறுதியால் முத்திரையிடப்பட்டது ; எல்லா வற்றிற்கும் மேலாகக் கிறிஸ்துவின் திருவருட்சாதனத் தாற் புனிதப்படுத்தப்பட்டது; இன்பத்திலும் துன்பத் திலும், உடலாலும் உள்ளத்தாலும் தவறக் கூடாத முறையில் பிரமாணிக்கம் கொண்டது ; ஆகையால், அது எல்லா வித விபசாரத்தையும், மணமுறிவையும் புறம்பாக்குகிறது. ஆண் பெண் ஆகியோர். ஒருவர் ஒரு வர் பாற் கொண்டுள்ள முழு அன்பில் இருந்து கண்டு கொள்ளப்பட வேண்டிய அவர்களின் தனி மாண்பில் ஆண்டவரால் உறுதிப்படுத்தப் பெற்ற திருமணத்தின் ஒற்றுமை தெளிவாகக் காணக்கிடக்கின்றது'' (G. S. 1. 49

''கடைசியாக, இந்த அன்பு பயனளிக்கும் அன்பா கும். ஏனெனில், அது கணவன் மனைவியரின் உறவோடு முடிந்து விடாது, பு தி த ா க த் தோன்றும் உயிர்களில் நீடித்திருப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது. திரும் ணமும் திருமண அன்பும் தம் இயல்பிலே பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளன. உண்மையிலே குழந்தைகள் திருமணத்தின் மிகச் சிறந்த கொடைகளாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவை பெரிதும் உதவுகின்றன'' (G S 50).

ஆகையால், கணவனும் மனைவியும் பொறுப்பு வாய்ந்த பெற்றோராய்ப் பணிபுரிய வேண்டுமெனத் திருமண அன்பு வலியுறுத்துகிறது. (Humanae Vitae n. 9. 10)

- கிறிஸ்தவ தம்பதிகள் தங்கள் திருமண உரிமைகளைப் பயன்படுத்தும் போது திருச்சபை வி ள க் கி க் கூறும் இறைச் சட்டத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். ''பிள் ளைகளின் பிறப்புகளை இடைவெளிப் படுத்த இறைவ னாலேயே அமைக்கப் பெற்ற இயல்பு முறை ஒழுங்கு களும், கருவுறுதலுக்குரிய ஒழுங்குகளும் உண்டு. எனி னும் இயற்கைச் சட்டத்திற்கு விளக்கம் கூறும் திருச் சபையின் தொடர்பான படிப்பினையின்படி, ஒவ்வொரு திருமணச் செயலும் புது உயிரை உருவாக்கக் கூடிய முறையில் அமைந்திருக்க வேண்டும்''. (Humanae Vitae n. 11) ஆகவே, ''தம்பதிகள் தங்கள் திருமண உரிமை களைத் தகுந்த, இயல்பான முறையில் பயன்படுத்தினால் இயற்கைக் காரணங்களின் நிமித்தமோ அல்லது சில குறைபாடுகளின் நிமித்தமோ புது உயிர்கள் உருவா காது போனால் அவர்கள் இயற்கைக்கு மாறாக நடந்து கொள்கிறார்கள் என்று அவர்கள் மேற் குற்றஞ் சுமத்த முடியாது'' (Casti Connubii n. 57).

ஈற்றில் அன்பின் பந்தனத்தால் முத்திரையிடப் பட்ட குடும்பத்தில் மிளிர வேண்டியது ஒன்று உண்டு அதுவே புனித அகுஸ்தீனார் குறிப்பிடும் ''அ ன் பின் ஒழுங்கு' ' அதாவது, மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் கணவனே தலைமைத் தானத்தைப் பெற வேண்டியவன்,

புனித சின்னப்பரின் கட்டளைப்படி “ மனைவியரே ஆண்ட வருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள், ஏனெனில், கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போலக் கணவன் மனைவிக்குத் தலை யாய் இருக்கிறான். கிறிஸ்து திருச்சபையாகிய தம் உட லின் மீட்பர். அந்தத் திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந் திருப்பது போல மனைவியரும் கணவர்க்கு அனைத்திலும் பணிந்திருத்தல் வேண்டும்'' (எபே, 5, 22.24) (Casti Connubii n. 26).

13-ம் சிங்கராயர் பாப்பிறையின் விளக்கவுரைப்படி கணவன் குடும்பத்தை ஆளுபவனும் மனைவியின் தலை வனுமாம். மனைவியோ அவனுடைய சதையின் சதையும் எலும்பின் எலும்புமானவளாகையால் அவனுக்குப் பணிந்து அமைந்து நடப்பாள். இவ்வாறு பணிவு காட் டும் அதே வேளை அவனுக்குச் சங்கை மரியாதை செலுத் தத் தவற மாட்டாள். எனினும், “ கட்டளை கொடுக் கும் கணவனும் பணிந்து நடக்கும் மனைவியும் இறை அன்பை அளவு கோலாகக் கொண்டே தத்தம் கடமை களை அளக்க வேண்டும்; ஏனெனில், அவர்கள் இருவ ரும் இறைவனுடையவும், திருச்சபையுடையவும் சாய லைப் பெற்றிருப்பதாலேயாம்'' (Arcanun Divinae)